லைஃப்ஸ்டைல்
பிரவித்த பெண்களுக்கு புத்துணர்ச்சி தரும் மசாஜ்

பிரசவித்த பெண்களுக்கு புத்துணர்ச்சி தரும் மசாஜ்

Published On 2021-07-09 08:33 GMT   |   Update On 2021-07-09 09:29 GMT
பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள், உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
முதல் குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் பிரசத்துக்கு முந்தைய உடல் வலிமையை மீண்டும் பெற ஆரோக்கியமானஉணவு மட்டுமே போதாது. தளர்வடைந்த வயிற்று தசைகள், கருப்பை மற்றும் உடல் உறுப்புகளை மீண்டும் நன்றாக செயல்படுவதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மசாஜ் செய்வதும் அவசியம்.

பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

மசாஜ் என்பது எண்ணெய்யை உடலில் தேய்த்து விடுவது மட்டுமல்ல.  அதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டே
மசாஜ்
செய்ய வேண்டும். அதன் மூலமே முழுமையான பலன்களை பெற முடியும். பிரசவித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற சில மசாஜ் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஸ்வீடிஷ் மசாஜ்

கிளாசிக் மசாஜ் என்றும் இந்த முறை குறிப்பிடப்படுகிறது. உடலின் முக்கிய நரம்புகளை மென்மையாக தேய்த்து விடுவது பிசைவது குலுக்குவது, தட்டுவது என பல முறைகளில் இந்த மசாஜ் செய்யப்படுகிறது. பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யப்படும் இந்த மசாஜ் மூலம், எளிதாக புத்துணர்ச்சியும், அமைதியும் பெற முடியும்.

ஜமு மசாஜ்

இந்தோனேசியாவில் பரவலாக இங்வகை மசாஜ்
அளிக்கப்படுகிறது.நமது நாட்டிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. மருத்துவ ரீதியாக பல நன்மைகள் அடங்கியுள்ள இந்த மசாஜ் செய்வதற்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வேர்கள், மரப்பட்டைகள் பூக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தளர்ந்த வயிற்று தசைகள் இறுக்கமடைவதற்கு உதவியாக இருப்பதுடன் பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தொப்பை பிரச்சனைக்கும் இந்த மசாஜ் நல்ல தீர்வாக அமையும்.

கால் ரிஃப்ளெக்சாலஜி

கால்களில் உள்ள தசைகளை வலுவாக்க இந்த மசாஜ் உதவியாக இருக்கிறது. கால்களில் அமைந்துள்ள அக்குபிரஷர் புள்ளிகள் இந்த முறையில் தூண்டிவிடப்படுவதால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும். மகப்பேறு முடிந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு, உடல் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இந்த மசாஜ் நல்ல பலன் அளிக்கும்.

மூலிகை குளியல்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமானது மூலிகை குளியல், பிரசவத்திற்கு முன்னரும், பின்னரும் தாய்மார்களுக்கு மூலிகை குளியல் அளிக்கப்படுவது நல்லது. மருததுவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை நீரில் ஊற வைத்து அதில் குளிக்க செய்து மசாஜ் அளிக்கப்படும். அதனால் நரம்புகள் வலுவடைந்து உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.

அக்குபிரஷர்

உடலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட புள்ளிகளை தேர்வு செய்து அங்கே விரல்கள் மூலம் மென்மையாக அழுத்தம் கொடுத்து நரம்புகளை தூண்டச்செய்யும் முறை இதுவாகும். உடல் வலியை அகற்றவும், அசவுகரியங்களை நீக்கவும் அக்குபிரஷர் முறை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. பல நன்மைகளை கொண்ட இம்முறையை பின்பற்றும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றிருக்கும் நிலையில் தையல் போடப்பட்ட காயம் ஆறும் வரை இம்முறையை மேற்கொள்ளக்கூடாது.
Tags:    

Similar News