பெண்கள் உலகம்
பெண்களை நீரிழிவு நோய் அதிகம் தாக்குவது ஏன்?

பெண்களை நீரிழிவு நோய் அதிகம் தாக்குவது ஏன்?

Published On 2021-06-18 13:50 IST   |   Update On 2021-06-18 13:50:00 IST
ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் நோய் தாக்கத்தின் தன்மை அதிகம் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, உலகம் முழுவதும் 41 கோடியே 50 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் 19 கோடியே 90 லட்சம்பேர் பெண்கள்.

உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோயின் தலைநகரமாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர்
நீரிழிவு
பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.8 சதவீதமாகும். டைப் -1 நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்போது ஆண்களை விட பெண்களுக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் 47 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பெண்களில் 9 சதவீதம் பேருக்கு ஆண்களைவிட இதய செயலிழப்புக்கான அபாயம் அதிகம் இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் இதய நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் இணை ஆசிரியர் சானே பீட்டர் கூறுகையில், ‘‘ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கால அளவு இதய செயலிழப்புக்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது. மேலும்
நீரிழிவு
நோய்க்கு ஆளாகும் ஆண்கள் உட்கொள்ளும் மருந்தை விட பெண்கள் குறைவான அளவிலேயே உட்கொள்கிறார்கள். அதோடு ஆண்களை ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெண்களுக்கு குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார்.

ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு, மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன. 2040-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 31 கோடியே 30 லட்சம் பெண்கள்
நீரிழிவு
நோய் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயால் 21 லட்சம் பெண்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.

Similar News