லைஃப்ஸ்டைல்
40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Published On 2021-06-05 07:32 GMT   |   Update On 2021-06-05 07:52 GMT
நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
பெண்களால் எந்த வயதிலும் அழகாக உணர முடியும். உங்களால் முயற்சியில் ஈடுபட முடிந்தால் அதுவும் சாத்தியமே. 40 வயதுக்கு மேல் நீங்கள் சோர்வாக இல்லாமல் சில நல்ல வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை மேற்கொள்வது என்றைக்கும் நன்மை அளிக்கும். பெண்களைப் பொருத்தவரை ஒருவருக்கு வயதாகும் போது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளும் நோய்களின் அபாயங்களும் அதிகரிக்கிறது.

நாள்பட்ட வலி மற்றும் நோய்களால் அவர்கள் அவதியுறுகின்றனர். வழக்கமான உடல் செயல்பாடு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நோயைத் தடுக்கவும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி உடலை வலிமையாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதைப் பின்பற்றி நடப்பது நீங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவி செய்யும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கலாம். உடற்பயிற்சியின் போது உடற்பயிற்சியின் தீவிரத்தை சரிபார்க்க நீங்கள் இதய துடிப்பு மானிட்டரைப் பயன்படுத்தலாம், அதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் உடற்பயிற்சிகளையும் சரியாக நிர்வகிக்கலாம். உங்களிடம் இதய துடிப்பு மானிட்டர் இல்லையென்றால், ஒரு எளிய துடிப்பு சோதனை உங்கள் இதய துடிப்பு வீதத்தைப் புரிந்துகொள்ள உதவும். உங்கள் இதயத் துடிப்பை கணக்கிட ஒவ்வொரு துடிப்புகளை 6 விநாடிகளுக்கு எண்ணி அந்த எண்ணிக்கையை 10 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, இலக்கு இதய துடிப்பு 90-153 ஆகும், மேலும் அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என வாரத்திற்கு 5 நாட்கள் விறுவிறுப்பாக நடப்பது பொருத்தமானது மற்றும் பயனளிக்க கூடியது. உங்களுக்கு அதிக நேரம் கிடைத்தால் ஜாகிங் அல்லது ஓடுதல் போன்ற தீவிரமான பயிற்சிகளை ஒரு நாளைக்கு 15 முறை செய்யுங்கள்.

நீங்கள் உடற்பயிற்சியை ஒரு வேலையாகப் பார்த்தால், அதன் பலன்களை நீங்கள் அனுபவிப்பது குறைவு. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு வகை உடற்பயிற்சியைக் கண்டுபிடிக்கும் வரை நீங்கள் பரிசோதனை செய்யலாம். ஏனெனில் நீங்கள் விரும்புகின்ற உடற்பயிற்சியை செய்யும் போது டோபமைன், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின், வெகுமதி, விழிப்புணர்வு, மனநிறைவு மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை கையாளும் நரம்பியக்கடத்திகள் ஆகியவற்றை வெளியிட உதவுகிறது.

வலிமை பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் வயதில் எலும்பு மற்றும் தசை இழப்பைக் குறைக்கிறது. படிக்கட்டுகள் ஏறுவது மற்றும் தோட்டக்கலை போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு உங்கள் உடலை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு முறிவு நோய்க்கு வலிமை பயிற்சி நன்மை பயக்கும். இந்த நோய் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

வலிமை பயிற்சி இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் 55-66 வயதுடையவர்களுக்கு லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.



Tags:    

Similar News