லைஃப்ஸ்டைல்
தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை

தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை

Published On 2020-10-16 05:53 GMT   |   Update On 2020-10-16 05:53 GMT
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
தாய்ப்பால் தானம், தாய் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் நல்ல திட்டம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை செய்ய சில மருத்துவ அலுவலர்களுக்கும் மனமில்லை, தாய்மார்களுக்கும் பொறுமை இல்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரே ஒரு முறை மாட்டுப்பால் அல்லது பால் பவுடரிலிருந்து பெறப்படும் பாலை கொடுப்பதே, தாய்ப்பால் சுரப்பை குறைக்க போதுமானதாக இருக்கும் என்கிறது அறிவியல்.

குழந்தை பிறந்த 60 நிமிடத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலை தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் 60 நிமிடத்துக்குள் தாய்ப்பால் தரவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது தரும் ஆவணத்திலும் பதிவு செய்ய வேண்டும். இது மருத்துவரின் தார்மீக பொறுப்பு என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவு செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைபிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்க முடியும்.

வேலைக்கு போகும் பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறையாக 6 மாதங்களை ஊதியத்துடன் பரிந்துரைக்கிறது. ஆனாலும் 46.8 சதவீத தாய்மார்கள்தான், குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாயின் மார்பை வற்றச்செய்ய ஒரு நாள், ஒருவேளை மாற்றுப்பால் போதும். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை.

அதை தருவது தாயின் கடமை. வேலைக்கு செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குழந்தை ஒரு மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே மறு மார்பில் பாலை எடுப்பது சுலபம். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் 24 மணி நேரம் வரை கெடாது. வேலைக்கு கிளம்பும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்புகளில் எடுத்து, அவற்றில் நேரத்தை குறித்து வைத்து செல்லலாம். சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்கு புகட்ட வேண்டும் என்கிறது மருத்துவ வழிகாட்டி.
Tags:    

Similar News