லைஃப்ஸ்டைல்
கர்ப்பகாலத்தில் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தாதீங்க... எச்சரிக்கை...

கர்ப்பகாலத்தில் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தாதீங்க... எச்சரிக்கை...

Published On 2020-09-19 05:57 GMT   |   Update On 2020-09-19 05:57 GMT
கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான அழகு சாதனப்பொருட்களில் பாராபென்ஸ் எனும் ரசாயனப்பொருட்கள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் அத்தகைய அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் அது குழந்தையின் எடை வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதுகுறித்து பெர்லினில் உள்ள சாரிட் பல்கலைக்கழக மருத்துவமனை, பெர்லின் சுகாதார நிறுவனம், லீப்ஜிக் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன.

“அழகு சாதனப்பொருட்களில் மெத்தில் பாராபென், புரோபில் பாராபென், ப்யூட்டில் பாராபென் உள்ளிட்டவை பாராபென் ரசாயனங்களில் குறிப்பிடத்தக்கவை. கிரீம்களிலும், லோஷன்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இத்தகைய பொருட்கள் விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற் படுத்தக்கூடும். கர்ப்பிணி பெண்களின் சருமத்தின் வழியாக பாராபென்கள் உள் இழுக்கப்பட்டால் அது குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட கர்ப்பிணிகளின் சிறுநீரில் பாராபென்கள் அதிக அளவில் இருந்தன.

அவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப்பொருட்களில் இருந்துதான் அந்த பாராபென்கள் கலந்திருப்பது தெரியவந்தது. கிரீம்கள், லோஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது அவை நீண்டகாலமாக சருமத்தில் படிந்திருக்கின்றன. அவை கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியோடும் தொடர்பு கொண்டிருக்கின்றன. தாய்மார்களின் சிறுநீரில் உள்ள பியூட்டில்பராபனின் செறிவுகளுக்கும், அவர்கள் பெற்றெடுத்த மகள்கள் வளர்ந்ததும் வயதுக்கு பொருத்தமில்லாத உடல் பருமன் கொண்டிருப்பதற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தோம்” என்கிறார்.
Tags:    

Similar News