லைஃப்ஸ்டைல்
பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் இறப்பதற்கான காரணங்கள்

பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் இறப்பதற்கான காரணங்கள்

Published On 2020-08-13 07:54 GMT   |   Update On 2020-08-13 07:54 GMT
கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவத்தை தொடர்ந்து கடுமையான ரத்தப்போக்கு அல்லது தொற்றுநோய்களால் தாய்மார்கள் இறப்பது அதிகரிக்கிறது என்று யுனிசெப் அமைப்பு கூறுகிறது.

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவை காரணமாகவும் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் 2015 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் 122 ஆக இருந்தது. பின்பு 113 ஆக குறைந்துள்ளது. தாய்வழி இறப்பு விகிதம் என்பது பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது. சராசரியாக இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்வழி இறப்பு விகிதம் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 141 ஆக இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இறப்பு விகிதம் 159 ஆக உயர்ந்திருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இறப்பு விகிதம் 89-ல் இருந்து 99 ஆக உயர்ந்திருக்கிறது. அதுபோல் பஞ்சாப் மாநிலத்தில் 122-ல் இருந்து 129 ஆக வும், மேற்கு வங்காளத்தில் 94-ல் இருந்து 98 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேரில் 229 பேர் மரணத்தை தழுவும் நிலை இருக்கிறது. குறைந்தபட்சமாக கேரளாவில் இறப்பு விகிதம் 42 ஆக இருக்கிறது. இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி தாய்வழி இறப்பு விகிதம் 7.4 சதவீதம் குறைந்திருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தாய்வழி இறப்பை தொடர்ந்து குறைத்து வருகின்றன.
Tags:    

Similar News