பெண்கள் உலகம்
நடுத்தர வயது பெண்களை அதிகம் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்

நடுத்தர வயது பெண்களை அதிகம் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்- காரணம் எது தெரியுமா?

Published On 2020-07-29 10:45 IST   |   Update On 2020-07-29 10:45:00 IST
நுரையீரல் புற்றுநோய் ஆண்கள் , பெண்கள் இருவரையுமே தீவிரமாகத் தாக்கினாலும் 30 - 49 வயது கொண்ட இளம் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. இதற்கு எது காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.
52 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை உலக புற்றுநோய் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2030 ஆண்டுக்குள் 43% ஆக அதிகரிக்கும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. இந்த நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புகளே அதிகம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

இது ஆண்கள் , பெண்கள் இருவரையுமே தீவிரமாகத் தாக்கினாலும் 30 - 49 வயது கொண்ட இளம் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. அப்படி உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகமாகவும், விரைவாகவும் பாதிக்கிறது. விரைவில் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்பை சந்திப்பதாகக் கூறுகின்றனர்.

பெண்களைக் கொல்லும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவைதான் பெரிதாக கவனம் பெறுகிறது. ஆனால் நுரையீரல் புற்றுநோய் சத்தமில்லாமல் பரவி வருவதாக கூறுகின்றனர்.

அதேபோல் நுரையீரல் புற்றுநோய் என்பதும் ஆண் , பெண் இருவருக்கும் வேறுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பெண்களுக்கு அறிகுறிகள் தென்பட்டாலும் அதை அலட்சியமாகக் கருதுகின்றனர். 

Similar News