லைஃப்ஸ்டைல்
பெண்களே டைட்டா பிரா போட்டா இந்த பிரச்சனைகள் வரும்

பெண்களே டைட்டா பிரா போட்டா இந்த பிரச்சனைகள் வரும்

Published On 2020-07-18 06:44 GMT   |   Update On 2020-07-18 06:44 GMT
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் பிராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால் தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.

அதிக அளவில் டைட்டாக போடப்படும் ப்ராவினால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். மார்பு எலும்புக்கூடு வலிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக அளவில் டைட்டாக போடுவதால் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். எனவே சரியான சைஸ் தேர்ந்தெடுத்து போடுவது அவசியம்.

சரியான அளவை தேர்ந்தெடுக்காமல் விட்டால் பிரா பட்டைகள் தோளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலநேரங்களில் முதுகுவலி அதிகமாக்கிவிடும். இது டென்சனை அதிகமாக்கிவிடும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் வேலையில் கவனக்குறைவை ஏற்படுத்திவிடும்.

அதிக அளவில் டைட்டாக போடப்படும் பிராவினால் மார்பு, முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படும். உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவது தடைபடும். உடல் செல்களுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் தலைபகுதிக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் தலைவலி ஏற்படும். மார்புபகுதியில் அழுத்தம் அதிகமாவதால் மார்பக வலி அதிகமாகிவிடும். மேலும் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்து அதுவே மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்கள் ப்ரா போடும்போது அதிக அளவில் லூசாக போட்டாலும் ஆபத்து, அதிகம் டைட்டாக போட்டாலும் ஆபத்துதான் எனவே சரியான அளவில் தேர்ந்தெடுந்து போட்டால் மட்டுமே உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
Tags:    

Similar News