லைஃப்ஸ்டைல்
கருவில் இருக்கும் குழந்தையை தொட முடியுமா?

கருவில் இருக்கும் குழந்தையை தொட முடியுமா?

Published On 2020-05-28 06:54 GMT   |   Update On 2020-05-28 06:54 GMT
குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
கர்ப்பிணிகள், வயிற்றுக்குள் இருக்கும் தங்கள் குழந்தையை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் பார்க்கிற பரவசத்துக்கு இணையில்லை. கருவில் இருக்கும் குழந்தையின் அசைவுகளை சி.டி.யாக பதிவு செய்து ரசிக்கிறவர்களும் உண்டு. ஆனால் பார்வையற்ற பெண்கள் இந்த மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பார்கள்? அவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், அச்சிடப்பட்ட ‘3டி அல்ட்ரா சவுண்ட்’. தொழில்நுட்பம்.

இந்த தொழில்நுட்பம் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் அமைப்பை அப்படியே அச்சு அசலாக பிரதி எடுக்கலாம். பார்வையற்ற ஒரு பெண், கருவில் இருக்கும் தன் குழந்தையின் முகம், பிஞ்சு கைகள் மற்றும் கால்களை தொட்டுப் பார்க்கும் அற்புத தருணத்தை பதிவுசெய்து ஒரு வீடியோ பதிவு வெளியாகி இருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களால் அது பார்க்கப்பட்டு இருக்கிறது.

தொழில்நுட்பமும் தாய்மை உணர்வும் சங்கமிக்கும் இந்த 3டி அல்ட்ராசவுண்ட் தொழில் நுட்பத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
Tags:    

Similar News