லைஃப்ஸ்டைல்
வாடகைத்தாய் முறை

வாடகைத்தாய் முறையில் உள்ள சிக்கல்கள்

Published On 2020-05-22 03:22 GMT   |   Update On 2020-05-22 03:22 GMT
வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகில் 26 நாடுகளில் வாடகைத்தாய் முறை தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன மருத்துவ சிகிச்சைகளும், திறன் வாய்ந்த மருத்துவர்களும் இங்கு அதிகம். வாடகை தாய்க்கான முறையான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்று கூறப்பட்டாலும், இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் அளித்த வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.

கர்ப்பத்தை 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் வாடகைத்தாய்க்கு கிடைக்க வேண்டிய பணம் சரியாக போய்ச்சேராமல் கேள்விக்குறியாகி விடக்கூடாது. பிரசவத்துக்கு பின்னும் வாடகைத்தாயின் பாதுகாப்பும் பராமரிப்பும் அதற்கான மருத்துவச் செலவுகளையும் ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விதி முக்கியமானது.

என்னதான் பணத்தை பெற்றுக்கொண்டு பிரசவித்தாலும் தொப்புள் கொடி உறவு சாதாரணமானதல்ல. பிரசவத்துக்குபின் மனதளவில் வாடகைத் தாய்மார்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியம். வாடகைத்தாயை இந்திய சமூகம் குழந்தை பேறின்மைக்கான தீர்வாக பார்க்காமல் பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு அடைபவர்களுக்கான சட்டம் இன்னும் முழுமையான வரையறைக்குள் வரவில்லை.

வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Tags:    

Similar News