லைஃப்ஸ்டைல்
தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் எ‌வ்வளவு தெரியுமா?

தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் எ‌வ்வளவு தெரியுமா?

Published On 2020-05-18 07:58 GMT   |   Update On 2020-05-18 07:58 GMT
உட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌ம்தா‌ன் 100 வய‌திலு‌ம் தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட வை‌க்கு‌ம் கரு‌வி எ‌ன்பதை மன‌தி‌ல் கொ‌ள்ளவு‌ம்.
அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பேறு மரு‌ந்‌திய‌ல் ‌பி‌ரி‌வி‌ன் ‌ஸ்டே‌சி டெ‌ஸ்ல‌ர் ‌லி‌ண்டா‌வ் தலை‌மை‌யிலான குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தாம்பத்திய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் இறு‌தி முடிவாக, பொதுவாக, முதுமை கால‌த்‌தி‌ல் ஆ‌ண்களு‌க்கு பெ‌ண்களை ‌விட தாம்பத்திய உண‌ர்வு அ‌திக‌மாக உ‌ள்ளது. மேலு‌ம், ஆரோ‌க்‌கியமான உட‌ல்‌நிலை உ‌ள்ளவ‌ர்களு‌க்கு 70 வயது வரை தாம்பத்திய உண‌ர்வு இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சராச‌ரியாக 30 வயதுடைய ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 35 ஆ‌ண்டுக‌ள் வரையு‌ம், பெ‌ண்க‌ள் 31 ஆ‌ண்டுக‌ள் வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபாடு கா‌ட்ட முடியு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

55 வயதான ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 15 ஆ‌ண்டுகளு‌க்கு அதாவது 70 வயது வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட முடியு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்வு‌க் கூறு‌கிறது.

ஆ‌ய்வு முடிவுக‌ள் எதுவாக இரு‌ந்தாலு‌ம், உட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌ம்தா‌ன் 100 வய‌திலு‌ம் தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட வை‌க்கு‌ம் கரு‌வி எ‌ன்பதை மன‌தி‌ல் கொ‌ள்ளவு‌ம்.
Tags:    

Similar News