பெண்கள் உலகம்
பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..

பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..

Published On 2020-05-13 13:48 IST   |   Update On 2020-05-13 13:48:00 IST
தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.
ஆண்களுக்கு இருப்பதை போன்று பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் ஆகஸ்ட் மாதம் 2015_ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் மேற்கொள்ளும் உடலுறவில் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களுக்கான வயகரா வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய அளவிலான மாத்திரையாக இருக்கும்.

உடலுறவு மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரையை மதுவுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது.அப்படி செய்தல் உங்கள் இரத்த அழுத்தம் கீழ்நிலைக்கு சென்று உயிரே போய் விடும்.

இந்த வயகராவை பெண்கள் எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக உட்கொள்ள வேண்டும். இதனுடைய பலன் ஏதும் தெரியவில்லை என்றால் உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்பின் மீது செயல்படுவது போல இல்லாமல் இது பெண்களின்  பிறப்புறுப்பை காட்டிலும் அவர்களின் மூளையின் மீது செயல்பட்டு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். இது மூளையில் செயல்பட்டு மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது.

தாம்பத்தியத்தில் திருப்தி இருக்கும்  பெண்களுக்கு இது தேவையில்லை. அதே போல  கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.

இது ஆண்கள் வயகரா செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.  ஆண்களின் பயன்படுத்தும் வயகரா விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி அவர்களை நன்றாக செயல்பட வைக்கும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய இந்தவகையான வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல் ஆசையை பெருக்கி அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து  செக்ஸ் ஆசையை தூண்டி விடுகின்றது.

நாம் பயன்படுத்துவதில் பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் கிடையாது. அதே போன்று இந்த வயகரா மாத்திரையால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை பயன் படுத்தும் பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம்  போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த வகையான வயகராவில் மேலும் சில குறைபாடுகளும் உள்ளது. இந்த வயகரா மாத்திரைகளை கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் பெண்கள் உட்கொள்ளக் கூடாது .

Similar News