லைஃப்ஸ்டைல்
சிகரெட் பழக்கத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

சிகரெட் பழக்கத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Published On 2020-05-11 06:08 GMT   |   Update On 2020-05-11 06:08 GMT
சிகரெட் பழக்கம் ஆண்-பெண் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு சற்று கூடுதலாக பாதிப்பை உண்டாக்குகிறது.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்

சிகரெட் புகைப்பதற்கு பெண்கள் பல காரணங்களை கூறினாலும், அது அவர்களின் கர்ப்பக்காலத்தில் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மேலும் எடை குறைவான குழந்தை, பிரசவத்தில் சிக்கல் என அடுக்கடுக்கான காரணங்களை, மருத்துவர்கள் அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.

மார்பக புற்றுநோய்

அதேபோல, புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இதுபோக நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறு, வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
Tags:    

Similar News