லைஃப்ஸ்டைல்
பெண்களின் உடல் உபாதைகளை தீர்க்கும் வெந்தயம்

பெண்களின் உடல் உபாதைகளை தீர்க்கும் வெந்தயம்

Published On 2020-04-30 06:32 GMT   |   Update On 2020-04-30 06:32 GMT
பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மாதவிடாய் :

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎரிச்சல்கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

டெலிவரி :

எல்லா கர்பிணிப்பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.

ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் :

முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News