லைஃப்ஸ்டைல்
பெண்ணின் கரு முட்டை

பெண்ணின் கரு முட்டை

Published On 2020-04-08 03:38 GMT   |   Update On 2020-04-08 03:38 GMT
ஒரு பெண்ணானவள், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே ஒரு மில்லியன் முட்டைகளை உருவாக்கும் கரு அணுக்களை உடையதான இரு சூலகங்களுடன் பிறக்கின்றது.
ஒரு பெண்ணானவள், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே ஒரு மில்லியன் முட்டைகளை உருவாக்கும் கரு அணுக்களை உடையதான இரு சூலகங்களுடன் பிறக்கின்றது. கருவானது ஒரு பருவமடைந்த பெண்ணில் ஒரு பாதாம் பருப்பு விதையினைப் (almond-sized) போன்ற இரு சூலகங்களில் அல்லது கருவறைகளில் உற்பத்தியாகின்றன.

இந்த சூலகங்கள் இரண்டும் கர்ப்பப்பைக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் சுமார் 20 கரு முட்டைகள் தயாராகி வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. ஆனால் அவற்றுள் பெரும்பாலும் ஒன்றோ அல்லது சிலவே மாத்திரம் முதிர்ச்சி அடைந்து வெளிவருகின்றன. வெளிவரும் முட்டைகள் பலோப்பியா குளாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லுகின்றது.

கருக்கட்டல் பலோப்பியா குளாயினுள்ளே நடைபெறுகின்றது. இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் (பலோபியன் குளாயினால்) உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அந்த கருமுட்டையோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினைப்பட்டு தொடர்ந்து உயிர்வாழ முடியும். கரு முட்டையை கருவாக்கும் (சினைப்படுத்தும்) ஆணின் விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது.

அவை கழிவாக மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது. பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய சிசுவுக்கான கரு உருவாகும். இதனை கருக்கட்டல் என அழைக்கப்படும். கருக்கட்டல் நிகழாதுவிடின் பெண்ணில் உருவாகிய கருமுட்டை அழிந்துவிடும். அதுவே மாதவிடாய் என கழிவாக வெளிவருகின்றது.
Tags:    

Similar News