லைஃப்ஸ்டைல்
இரவு நேரங்களில் பெண்களுக்கு ‘ஆன்லைன்’ ஆலோசனை

இரவு நேரங்களில் பெண்களுக்கு ‘ஆன்லைன்’ ஆலோசனை

Published On 2020-03-31 04:25 GMT   |   Update On 2020-03-31 04:25 GMT
20 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள்தான் ஆன்லைன் மருத்துவத்தை அதிகம் நாடுகிறார்கள். பெண்கள் பெறும் ஒட்டுமொத்த ஆலோசனைகளில் 66 சதவீதம் மகப்பேறு மருத்துவம் தொடர்புடையதாக இருக்கிறது.
இணையதளம் வழியாக டாக்டர்களை அணுகி ஆலோசனை பெறும் நடைமுறை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அப்படி மருத்துவ ஆலோசனை பெறும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மட்டும் 119 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆன்லைன் மருத்துவ மையம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கி வரும் டாக்டர் பிரியா கூறுகையில், ‘‘இத்தகைய ஆலோசனை முறை பெண்களுக்கு சவுகரியமாக இருக்கிறது. தங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது. அலைச்சல் இல்லாமல் உடனடியாக சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கிறது’’ என்கிறார்.

மகளிர் நலம் சார்ந்த விஷயங்களைத்தான் அதிக அளவில் பெண்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள்தான் ஆன்லைன் மருத்துவத்தை அதிகம் நாடுகிறார்கள். பெண்கள் பெறும் ஒட்டுமொத்த ஆலோசனைகளில் 66 சதவீதம் மகப்பேறு மருத்துவம் தொடர்புடையதாக இருக்கிறது. கடந்த ஆண்டில் மகப்பேறு மருத்துவ ஆலோசனை பெற்ற பெண்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வசிப்ப வர்களில் ஆன்லைன் மருத்துவத்தை நாடுபவர் கள் எண்ணிக்கை 67 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதியில் ஆலோசனை பெறுபவர்கள் வளர்ச்சி 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய், கர்ப்பம் போன்றவை குறித்து தான் பெண்கள் அதிக அளவில் ஆலோசனை கேட்கிறார்கள். ஆன்லைன் ஆலோசனை பெறும் பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அதற்கேற்ப மாலை 6 மணி முதல் 8 மணி வரை மகளிர் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள்.

மகளிர் மருத்துவத்திற்கு அடுத்தபடியாக சரும நோய் சார்ந்த விஷயங்களைதான் அதிகமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்கள். சரும மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் பெறுவது கடந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சரும ஒப்பனை, கூந்தல் பராமரிப்பு குறித்த தகவல்களை நிறைய பேர் தெரிந்து கொண்டிருக் கிறார்கள். பாலியல் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்வது பற்றிய விழிப்புணர்வும் 130 சதவீதம் உயர்ந்துள்ளது. 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை நலன், பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். குழந்தை மருத்துவம் குறித்து ஆன்லைன் மருத்துவர்களை நாடி யவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சளி, இருமல் மற்றும் தடுப்பூசி போடுவது குறித்த விஷயங்களுக்காக நாடியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு இரவு நேரங்களில்தான் நோய்த் தொற்றுகளின் தாக்கம் அதிகரிக்கும். அதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மருத்துவ ஆலோசனை பெறுபவர்களின் எண்ணிக்கை 93 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் 76 சதவீதம் பேர் மூட்டுவலி பாதிப்பு குறித்து ஆலோசனை பெறுகிறார்கள். மூட்டுவலி, எலும்பு முறிவு, கீல்வாதம், முதுகுதண்டுவட பாதிப்பு உள்ளிட்டவை குறித்து எலும்பியல் நிபுணர்களை நாடுபவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆன்லைனில் ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் வீடு தேடி வந்து சிகிச்சையும் அழிப்பதால் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையை நாடுபவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News