லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்

கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்

Published On 2020-03-26 04:05 GMT   |   Update On 2020-03-26 04:05 GMT
கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு யோகப்பயிற்சியே சிறந்தவழிமுறையாகும்.  கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.

பிரசவத்தை எளிய, சுகமான அனுபவமாக மாற்றிவிடக்கூடிய பயிற்சிகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அமர்ந்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம் :

சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து, இரு கால்களையும் மடித்துப் பாதங்களைச் சேர்த்துவைத்துப் பிடித்துக்கொள்ளவும்.வண்ணத்துப்பூச்சி சிறகுகளை விரிப்பதுபோல இரு தொடைகளையும் பக்கவாட்டில் உயர்த்தித் தாழ்த்தவும். தொடர்ந்து 10 முதல் 20 முறை வரை இப்படிச் செய்யலாம்.

படுத்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம் :

கால்களை நீட்டி, கைகளை சிறிது தள்ளி விரித்துவைத்துப் படுக்கவும். இரு கால்களையும் மடக்கி, இரு பக்கமும் பக்கவாட்டில் வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் போல லேசாக மேலும் கீழும் ஆட்டவும்.

வண்ணத்துப்பூச்சி ஆசனம் இருவகைப்படும் :

1. அமர்ந்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம்

 2. படுத்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம்

ஹத யோகா :  

ஹதயோகா என்பது கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய மென்மையான மற்றும் மிகவும்  ஆரம்பநிலை யோகா பயிற்சியாகும்.

ஆனந்த யோகா :

ஹத யோகா தொடர்பான, இந்த வடிவம்  ஆனந்த யோகாவாகும்.  தியானம்,  மூச்சுப்பயிற்சி மற்றும்  மந்திரங்கள் வாசித்தல் போன்றவை இவற்றுள் அடங்கும்.

வினி யோகா :

வினி யோகா என்பது கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சுவாசப் பயிற்சி ஆகும்.

சிவானந்தா யோகா :

இந்தப் பயிற்சியின் மூலம், கர்ப்பவதிகளின் நேர்மறை சிந்தனைகள் அதிகப்படுத்தப்படுகின்றது.

Tags:    

Similar News