லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது?

கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது?

Published On 2020-03-20 05:20 GMT   |   Update On 2020-03-20 05:20 GMT
கர்ப்பிணிகள் கார், பேருந்து, ரெயில் எதில் பயணிப்பது பாதுகாப்பானது? பயணிக்கத் திட்டமிடும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் எந்தக் காலத்தில் பயணிக்கலாம்; பயணிப்பதைத் தவிர்க்கலாம். கார், பேருந்து, ரெயில் எதில் பயணிப்பது பாதுகாப்பானது? பயணிக்கத் திட்டமிடும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

ஒவ்வொருவரின் உடல்நிலையும் ஒவ்வொரு மாதிரி. நீங்களும் உங்களது கருவும் ஆரோக்கியமாக இருந்தால் 36வது வாரம் வரை நீங்கள் பயணம் செய்யலாம். சிலருக்கு உடல்நிலை மோசமாக இருக்கும். அவர்கள் பயணிக்க கூடாது. பயணித்தால் கருவுக்கு பாதிப்பு வரலாம். இந்த மாதிரி பிரச்னையுள்ளவர்கள் குறைவான சதவிகிதம்தான். எனவே, தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்று நடப்பது நல்லது.

முதல் மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் பாதுகாப்பானது அல்ல. ஆரோக்கியமாக உள்ளவர்கள், 14-28 வது வாரம் வரை பயணிக்கலாம். இரட்டைக் குழந்தை வயிற்றில் இருப்பவர், ப்ரீகிளப்சியா, ப்ரீடர்ம் லேபர், ப்ரீமெச்சுர் ரப்சர் ஆஃப் மெம்ப்ரேன் போன்ற பிரச்னை உள்ளவர்கள் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

டிரிப் போகும் முன் உங்களது மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை கேட்டுவிட்டு செல்லலாம். உங்களுடன் வருபவர் உங்களை நன்கு பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். ஏதாவது எமர்ஜென்ஸி என்றால் அதை சமாளிக்க தெரிபவராக இருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், ப்ரீநேடல் விட்டமின், முதலுதவி கிட் இருப்பது நல்லது. எந்த இடத்துக்குப் போக திட்டமிட்டாலும், அந்த இடத்துக்கு எந்த டிரான்ஸ்போர்ட் விரைவில் செல்லுமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், நீண்ட நேரம் பயணத்தில் இருப்பதைத் தவிர்க்கலாம். டிராவல் திட்டம் எளிதில் மாற்றக்கூடியதாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

குறுகிய நேரம் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் பயணித்தால், சில இடங்களில் நிறுத்தி எழுந்து, கை, கால்களை அசைத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு பின்னர் பயணிக்கலாம். வயிற்றுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையே சீட் பெல்ட் அணியுங்கள். தோள்ப்பட்டை பெல்ட்டை வயிற்றுக்கும் மார்பகங்களுக்கும் இடையே அணியலாம்.

பயணிக்கையில் எப்போதும் உட்கார்ந்தே இல்லாமல் அடிக்கடி எழுந்து கை, கால்களை ஸ்ட்ரெச் செய்து கொள்ளுங்கள். தண்ணீர், ஜூஸ், மோர் போன்றவற்றைப் பருகுவது நல்லது. பயணிக்கையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மலச்சிக்கலை விரட்ட நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது. மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது.

சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும் முன்னரே சிறுநீர் கழித்துவிடுங்கள். சிறுநீர் அடக்கி வைத்தால் யூடிஐ பிரச்னை வந்துவிடும். பிளாடர் முழுமையாகவதற்கு முன்னரே அடிக்கடி சிறுநீர் கழித்துவிடுங்கள். ஹெல்தி ஸ்நாக்ஸை கைகளில் வைத்திருங்கள். மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் கைகளில் வைத்திருங்கள். இருசக்கர வாகனம் ஓட்டுவது, இருசக்கரத்தில் தொடர்ந்து பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. எப்போதாவது மிதமாக வேகத்தில் இரு சக்கரத்தில் பின்னாடி உட்கார்ந்து செல்லலாம். பேருந்தைவிட ரயிலில் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News