பெண்கள் உலகம்
கர்ப்பகால கல்வி

கர்ப்பகால கல்வி

Published On 2020-03-16 09:36 IST   |   Update On 2020-03-16 09:36:00 IST
கர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.
கர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டிலேயே முதன் முதலாக இங்கு தொடங்கப்படும் இந்த படிப்பை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படிக்கலாம். வரும் கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. கல்வி நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. கர்ப்ப கால நடை முறைகள், கர்ப்பகால உணவுகள், உடற்பயிற்சிகள், குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் உள்பட்ட அனைத்து விஷயங்களும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

‘‘இந்த பாடத்திட்டத்தில் 16 பகுதிகள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள், குடும்ப உடல் ஆரோக்கியம் உள்பட இந்த புதிய பாடத்திட்டத்தில் ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெறும்’’ என்கிறார், லக்னோ பல்கலைக்கழக அதிகாரி, துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா.

இந்த புதிய பாடத்திட்டத்துக்கு மகளிர் நலம் சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்த இந்த பாடத்திட்டம் உதவும் என்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் மது குப்தா. ‘‘கருத்தரித்த நாளில் இருந்தே நமது நாட்டு பெண்களின் உணர்ச்சிகளும், சிந்தனைகளும் குழந்தையை சுற்றியே இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் பெண் களின் செயல்பாடுகள், உணவு பழக்கங்கள், மன நலம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. இந்த பாடத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். இந்த பல்கலைக்கழகத்தை பின்பற்றி பிற கல்வி நிறுவனங்களும் கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய கல்வியை புகுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றும் சொல்கிறார்.

Similar News