பெண்கள் உலகம்
கட்டிப்பிடி வைத்தியம் நோயை அண்டவிடாமல் தடுக்கும்

கட்டிப்பிடி வைத்தியம்..... தீரும் பிரச்சனைகள்

Published On 2020-03-09 10:55 IST   |   Update On 2020-03-09 10:55:00 IST
உண்மையில், கட்டிப்பிடிப்பவரை விட கட்டிப்பிடிக்கப்படுபவருக்கு பலன்கள் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இருதரப்பிலும் ஒருவரை ஒருவரை விரும்பினால் மட்டுமே இது நடக்கும்.
ஒரு நாளுக்கு ஒரு கட்டிப்பிடி வைத்தியம் என்பது பல உடல் நலப்பிரச்னைகளை தூரத்தில் வைக்கும்.

கட்டிப்பிடிப்பதில் கூட விருப்பம் இல்லையா? எனினும் கட்டிப்பிடிப்பது பற்றிக் கற்றுக் கொள்வது, பல்வேறு உடல் ஆரோக்கியபலன்களை அளிக்கலாம். இது உங்கள் மனதை மாற்றும். கட்டிப்பிடித்தல் என்பது ஒரு எளிய செயல். இது தேவையற்றது என்று பலரும் நினைக்கலாம். ஆனால், ஒரு அரவணைப்பில் பல்வேறு குணப்படுத்தும் சக்திகள் அடங்கியிருக்கின்றன. அவை உங்கள் நலத்தில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும்.

* எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் விரும்பும் யாரேனும் ஒருவரை நீங்கள் ஆரத்தழுவும் போது, உங்களின் நரம்புகள் சில்லிடும். நரம்பானது, மூளைக்கு தகவல் அனுப்பி, உங்கள் அழுத்தத்தைக் குறைக்கும். உங்கள் உடல் மற்றும் தோல் தூண்டப்படுவதை உணரத்தொடங்கி, உடலின் பிற பாகங்களுக்கு நரம்பின் கிளைகள் மூலம் அந்த உணர்வு பரவும், இந்த உணர்வு உங்களை அமைதிப்படுத்தும்.

* இது வெளிப்படையான உண்மை. உங்களுக்குள் அழுத்தம் குறைவாக இருந்தால், உங்கள் கவலை தணிந்து விடும். உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் இருக்கும். ஒரு எளிதான கட்டிபிடித்தல், என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். நல்லதூக்கத்துக்காக படுக்கைக்கு போகும் பத்து நிமிடங்களுக்கு முன்பு, நீங்கள் விரும்பும் ஒருவரிடம், கட்டித்தழுவுவது குறித்து மனதளவில் நெருங்கிப் பேசலாம்.



* ஒரு மகிழ்ச்சியான, அன்பு நிறைந்த தொடுதல் என்பது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உடலின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன், இது இயற்கையிலேயே மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. தவிர, இது ஆக்சிடோசின் உற்பத்தியை அதிகரிக்கும். தவிர இது காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது.

* உங்களுடைய நரம்புகள் அழுத்தம் குறைந்திருக்கும் நிலையில் உங்களுடைய இதயத்துடிப்பு இயல்பாக இருக்கும். உங்கள் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்போது, உங்களுடைய நோய் எதிர்ப்புத் திறன் வலுப்பெறும். மிகவும் தளர்வான மூளை, நோய்களில் இருந்து உங்களை தூரத்தில் வைக்கும், குளிரின் தாக்கத்தைக் குறைக்கும். இதனால், உடல்நல வல்லுநர்கள் தியானத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒருவரை கட்டிப்பிடிப்பது, இந்த அனைத்தையும் செய்யும், அதிகமாகவும் செய்யும்.

கட்டிப்பிடிக்கப்படுபவரும் கூட ஒரு நல்ல மனநிலையை பெறமுடியும். உண்மையில், கட்டிப்பிடிப்பவரை விட கட்டிப்பிடிக்கப்படுபவருக்கு பலன்கள் அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இருதரப்பிலும் ஒருவரை ஒருவரை விரும்பினால் மட்டுமே இது நடக்கும்.

Similar News