லைஃப்ஸ்டைல்
மாதவிலக்கான பெண்கள்

மாதவிலக்கான பெண்கள் எதை செய்யலாம்? எதைத் தவிர்க்கலாம்?

Published On 2020-02-21 05:19 GMT   |   Update On 2020-02-21 05:19 GMT
மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
மாதவிலக்கான நேரங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது. மீறி செய்தால் கருப்பையானது தளர்ந்து கீழிறங்கும் வாய்ப்பு உள்ளது. குதித்து விளையாடினால் கருப்பைத் தசைகள் இறுகி, கர்ப்பப்பையின் மடிப்புகளில் ரத்தம் உறையலாம். கர்ப்பப்பையின் மென் சுவர் விரிந்து, உடைந்து, கட்டிகள், வீக்கம், திசு சிதைவு ஆகியவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில், கர்ப்பப்பைக்கு கூடுதலான ரத்த ஓட்டம் அவசியம். இதற்கு, பெண்களின் பிற உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும். இதனால்தான் மாதவிலக்கானப் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

மாதவிலக்கான பெண்கள் உள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூங்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ ரத்தப்போக்கின் வாசத்தை பூச்சிகள் அறிந்து, கடித்துப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஓய்வு ஏன் அவசியமாகிறது?

பெண்ணின் உடலானது, கருப்பையைக் கருத்தரிப்பதற்கு ஏதுவாக, “என்டோமெட்ரியம்” என்னும் சவ்வை கரைத்து, வளர வைத்து, பக்குவப்படுத்திக் கொள்கிறது.

மாதவிலக்கு ஏற்படும் போது 35-40 மி.லி ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

நீர்ச்சத்து, புரதம், ரத்தம், சளிச்சவ்வு, உப்புகள், எண்டோமெட்டிரிய திசுக்கள் ஆகியன கலந்த கருஞ்சிவப்பு நிற திரவமாக ரத்தம் வெளியேறும்.

மன அமைதியுடன் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கும் பெண்களுக்கு 3-4 நாட்கள் சீரான ரத்தப்போக்கு ஏற்படும்.

மாதவிலக்கு காலத்தில் ஓய்வெடுத்தால், கர்ப்பப்பை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களும் நன்கு உற்பத்தியாகின்றன.

மாதவிலக்கு காலத்தில் ஓடலாம், குதிக்கலாம், விளையாடலாம், வண்டி ஓட்டலாம் என விளம்பரம் செய்கின்றனர். இப்படியெல்லாம் செய்தால் ரத்தப்போக்கில் மாறுதல் ஏற்படுவதுடன், கர்ப்பப்பை தசைகள் திடீர் இறக்கத்தால் வீங்கி, கர்ப்பப்பைப் பெரிதாகின்றன.
Tags:    

Similar News