லைஃப்ஸ்டைல்
வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை

வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை முற்றிலும் நம்பகத்தன்மை உடையதா?

Published On 2020-02-19 04:56 GMT   |   Update On 2020-02-19 04:56 GMT
கர்ப்ப பரிசோதனை ஒரு பெண் கருதரித்திரிகின்றாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவும். இதற்குப் பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல உள்ளன.
திருமணமான பல பெண்கள் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்று சரியாகத் தெரியாமல் அவ்வப்போது குழப்பத்திலேயே இருப்பார்கள். ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் வரும் வரை, அவர்களுக்கு இந்த குழப்பம் இருக்கும். இதனை உறுதிப்படுத்த பல வகையில் வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் (Karpa parisothanai) செய்து பார்க்கலாம்.

கர்ப்ப பரிசோதனை ஒரு பெண் கருதரித்திரிகின்றாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவும். இதற்குப் பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல உள்ளன. மேலும் பெரும்பாலான பரிசோதனைகள் எளிதானதாகவும் இருக்கும். வீட்டிலிருந்த படியே பரிசோதனை செய்து கொள்ளும் போது, தேவையற்ற செலவுகள் மற்றும் நேர விரயங்களைத் தவிர்க்கலாம். மேலும், உங்களது கர்ப்பம் உறுதியானால் மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுகலாம், மேலும் உங்கள் கர்ப்பத்தைப் பற்றி பிறரிடமும் பகிரலாம். அதனால், எப்போதும் நீங்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை முற்றிலும் நம்பகத்தன்மை உடையதா? என்பது எதார்த்தமாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு கேள்வியாகும். பல பெண்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படுகின்றது. இதை நிரூபிக்க எந்த சான்றும் இல்லை என்றாலும், நமது தாய் மற்றும் பாட்டி என்று முன்னோர்கள் தாங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் வீட்டில் சில பரிசோதனைகளைச் செய்தும், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டனர் என்பது உண்மை.

எனினும், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய பழமையான பரிசோதனை முறைகள் பல நடைமுறையில் இல்லை என்றாலும், சில எளிதான வீட்டிலேயே செய்யக் கூடிய நவீன மருத்துவ பரிசோதனை முறைகள் வந்து விட்டன. மேலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள ஏற்படும் செலவு மிகவும் சிறியதே ஆகும். அதனால் இன்றுபெரும்பாலான பெண்கள் இந்தப் பரிசோதனை முறையைத் தேர்வு செய்து வீட்டிலிருந்தே பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்திய பின் மருத்துவரை அணுகுகின்றனர்.

இந்த வீட்டுப் பரிசோதனை உறுதியான பிறகு, அடுத்த கட்டமாக தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள, பரிசோதனை கூடத்திற்குச் செல்கின்றனர். அங்கே இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, கருதரித்திருப்பதை உறுதி செய்து கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு நல்ல உறுதியான மற்றும் தெளிவான செய்தியைத் தருவதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகி விடுகின்றது.
Tags:    

Similar News