லைஃப்ஸ்டைல்
பொய்யான, உண்மையான பிரசவ வலிக்கு உள்ள வித்தியாசம்

பொய்யான, உண்மையான பிரசவ வலிக்கு உள்ள வித்தியாசம்

Published On 2020-02-08 03:01 GMT   |   Update On 2020-02-08 03:01 GMT
உண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.
சுகமான வழியில் குழந்தை பிறப்பதற்கான முக்கிய அறிகுறி பிரசவ வலி ஏற்படுவது ஆகும். கர்ப்பப்பை சுருங்கி விரியத் தொடங்கியவுடன் பிரசவம் வலி பெண்ணுக்கு ஏற்படத் தொடங்கும். ஆரம்பக்கால பிரசவ வலி சற்று குறைவாகவும் உச்சக்கட்ட பிரசவ வலி சற்று அதிகமாகவும் இருக்கும். உண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.

உண்மையான பிரசவ வலி


உண்மையான பிரசவ வலி சரியான இடைவெளியில் வரும். அதாவது பத்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ற அளவில் வரும். இந்த இடைவெளி அளவு சிறிது சிறிதாகச் சுருங்கத் தொடங்கும்.அதாவது பத்து நிமிடம் ஏழு நிமிடம், பின் ஏழு நிமிடம் ஐந்து நிமிடம் என்று குறைவு ஆகும். அதே மாதிரி அந்த வலியின் கால அளவும் அதிகரிக்கும். இறுதிக்கட்ட பிரசவ நேரத்தில் இறங்கும் பொழுது இந்த பிரசவ வலி நொடிகளுக்கு ஒரு நொடி திரும்ப வாய்ப்பு உள்ளது.

பொய்யான பிரசவ வலி

இந்த பொய் பிரசவ வலியானது ஒரு ஒழுங்கான கால அளவில் ஏற்படாது. அந்த வலியின் அளவும் அதிகரித்துக் கொண்டு செல்லாது. அதே மாதிரி வலிகளுக்கு இடையேயான கால இடைவெளி குறையாது. இது சாதாரண வயிற்று அல்லது தசைப் பிடிப்பு மாதிரியானது. இதை பிராக்ஸ்டன் ஹிக்கஸ் கன்ட்ராக்ஜன் (Braxton-Hicks contraction) என்பார்கள்.இதுவும் கடைசி கர்ப்ப காலங்களிலே ஏற்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Tags:    

Similar News