லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு மனச்சோர்வுக்கு வித்திடும் விஷயங்கள்

பெண்களுக்கு மனச்சோர்வுக்கு வித்திடும் விஷயங்கள்

Published On 2020-01-10 03:33 GMT   |   Update On 2020-01-10 03:33 GMT
அலுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் உடல் நலனில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்தொடர்கிறார்கள்.
அலுவலக வேலைக்கு செல்லும் பெண்கள் தேவையற்ற மனச்சோர்வை எதிர்கொள்ள நேரிடும். தொழில்முறை செயல்பாடுகள், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், சமூக நிர்பந்தம் போன்ற பல காரணங்கள் தேவையற்ற மனச்சோர்வுக்கு வித்திடுகின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் சோர்வு அவர்களது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அலுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் உடல் நலனில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்தொடர்கிறார்கள். சரியான உடல் இயக்க செயல்பாட்டிற்கு இரவில் நல்ல தூக்கம் அவசியம்.

உடலில் தைராய்டுகளின் செயல்பாடுகள் சீரற்ற தன்மை யுடன் இருப்பதும் உடல் இயக்கத்தை பலவீனப்படுத்தி சோர்வுக்கு வழிவகுத்துவிடும். ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதும் சோம்பலையும், சோர்வையும் உண்டாக்கும். நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு போன்ற பிரச்சினைகளும் சோர்வை ஏற்படுத்துகின்றன. அதனை தவிர்க்க தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. மன அழுத்தமும் உடல் சோர்வுக்கு வித்திடும்.

நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் உடல் இயக்க செயல்பாட்டுக்கு தடையாக அமையும். ரத்தசோகை போன்ற பாதிப்புகளும் சோர்வின் தன்மையை அதிகப்படுத்திவிடும். பெண்கள் மனச்சோர்வை விரட்டுவதற்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். காய்கறிகள், பழங்கள் உடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கின்றன. உடலில் இரும்பு சத்து குறைந்துபோனால் எலும்புகள் பலவீனமாகி உடல் சோர்ந்து போய்விடும்.

ஆண்டுக்கு இரண்டு முறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கோள்ள வேண்டியது அவசியமானது. ஏதாவதொரு தியானம் செய்வதும் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் கொடுக்கும். தியானம் மனதை நிதானப் படுத்தும். பதற்றத்தை குறைக்கும். மனதில் உதிக்கும் தேவையற்ற சிந்தனைகளை அழித்துவிடும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் தோன்ற வழிவகுக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளமான சவால்களையும், தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அது தேவையற்ற மனச்சோர்வை உண்டாக்கும். அதனை தவிர்ப்பதற்கு வாழ்க்கை முறையிலும், ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Tags:    

Similar News