லைஃப்ஸ்டைல்
பெண்களின் கர்ப்ப காலத்திற்கு மிகச் சிறந்தது யோகா

பெண்களின் கர்ப்ப காலத்திற்கு மிகச் சிறந்தது யோகா

Published On 2020-01-06 04:15 GMT   |   Update On 2020-01-06 04:15 GMT
கர்ப்ப காலத்தில் யோகா பெண்களை நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. கர்ப்பம் அல்லது பிரசவ காலத்தில் ஏற்படும் எந்த சிக்கல்களையும் கடந்து வருவதற்கு உகந்த வாய்ப்பு தருவதை உறுதிசெய்கிறது.
பெண்கள் கருத்தரித்தல் மற்றும் தாய்மை ஆண்டுகளில் பல்வேறு உடல் மாற்றங்களை அடைகின்றனர். யோகா பெண்களுக்கு உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது. பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தின்போது பல்வேறு 'அன்னிய' உணர்வுகளை அனுபவிக்கிறார்கள்; நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அவர்கள் அடைவதும் பராமரிப்பதும் மிக முக்கியமானவை. சில நேரங்களில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பல்வேறு ஹார்மோன் மாற்றங்களைக் அடையும் கடினமான காலம் இது.

பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சிகளை சரியான உருவில் வைத்திருக்க சில யோகாசனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் யோகா பெண்களை நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. கர்ப்பம் அல்லது பிரசவ காலத்தில் ஏற்படும் எந்த சிக்கல்களையும் கடந்து வருவதற்கு உகந்த வாய்ப்பு தருவதை உறுதிசெய்கிறது.

குழந்தை பிறப்பதற்கு முன்னர் செய்யும் யோகா, உடல் மாறிவரும் போது ஏற்படும் தேவைகள் மற்றும் திறன்களை ஏற்கவல்ல பல நன்மைகளை கொண்டுள்ளது. இது பெண்களின் கர்ப்பப் பையின் தசைகளை வலுப்படுத்த உதவுவதுடன், முதுகெலும்பு, கூடுதல் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் உதவுகிறது. பிராணயாமா மற்றும் யோக சுவாசம் ஆகியவை, பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தசை நார் இழப்புகளில் உறுதிப்பாட்டை பெற உதவுகின்றன. பாலூட்டிகளையும் அதிகரிக்கச் செய்கிறது.
Tags:    

Similar News