லைஃப்ஸ்டைல்
ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகள்

ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகள்

Published On 2020-01-02 05:38 GMT   |   Update On 2020-01-02 05:38 GMT
ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகள், மழைக்காலத்தில் தங்களையும் தங்களின் கருவையும் ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா பிரச்னையுள்ள பெண்கள், அன்றாட வாழ்வியல் முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. காரணம், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் அசௌகர்யங்களில் முக்கியமானது, மூச்சுத்திணறல். ஏற்கெனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தால், கர்ப்பகாலத்தில அது தீவிரமாகலாம் என்பதே அவர்களின் கருத்து.

ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் பிரச்சனை ஏற்படுகிறதென்றால், அந்த மூச்சுத்திணறல், குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, தேவையில்லாத சிக்கல்களையும் அசௌகர்யத்தையும் தரலாம். முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களோடு தொடர்புள்ளது என்பதால், மற்ற காலங்களைவிடவும் மழைக்காலத்தில், ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

இயல்பிலேயே டஸ்ட் அலெர்ஜி உள்ள ஆஸ்துமா நோயாளிகளுக்கு, காற்றிலேயே ஒட்டியிருக்கும் மழை நேர மாசுக்கள் அதிக பிரச்னையைத் தரும். அப்படியிருக்கும்போது, அன்றாடம் அளவுக்கதிகமான தூசுகளை உள்ளிழுக்கும் சூழலுக்கு மத்தியில் வாழ்பவர்கள், முடிந்தவரை அந்தச் சூழலைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

கர்ப்பகாலத்தில் ஆஸ்துமா கட்டுப்பாட்டுக்கு இன்ஹேலர் உபயோகிப்பது, குழந்தையையும் இந்த நோய்க்குக் கொண்டு வந்துவிடுமோ எனச் சிலர் பயப்படுவது உண்டு. இப்படி யோசிப்பவர்கள், மூச்சுத்திணறல் தீவிரமாகும் வரையில் இன்ஹேலர் உபயோகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள். இவர்கள், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமாக சுவாசிக்கும் தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள்தான் ஆரோக்கியமாகப் பிறப்பார்கள். சொல்லப்போனால், சுவாசச் சிக்கல்களோடு கர்ப்பகாலத்தைக் கடப்பதுதான், குழந்தைக்கு ஆபத்தாக முடியும். எந்தச் சூழலிலும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். 
Tags:    

Similar News