லைஃப்ஸ்டைல்
50 வயதிலும் தாம்பத்தியம் சிறக்க என்ன செய்யலாம்?

50 வயதிலும் தாம்பத்தியம் சிறக்க என்ன செய்யலாம்?

Published On 2019-12-31 03:24 GMT   |   Update On 2019-12-31 03:24 GMT
வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.
வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. எனினும், இளமையில் வாழ்ந்த வாழ்க்கையை, வயதில் முதுமடையும் வழியில் பயணிக்கும் போது எதிர்பார்ப்பது பேராசை. தாம்பத்திய வாழ்க்கையை பூர்த்தி செய்ய மருத்துவத்தை நாடிச் செல்வதும் விபரீதம் தான். அதனால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

இளமையில் ஏற்பட்ட அனுபவங்கள், முதுமையில் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஏமாற்றமே மிஞ்சும். முதுமை அடையும் வயதில், பாலியல் உறவில் வேகம் குறையலால். ஆனால் திறன் குறையாது.

ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்புச்சோறாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் பாலியல் உறவும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது பாலியல் உணர்வை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்றுவிடும். இதனால் கலவியில் ஈடுபடும் போது பெண்களுக்கு எரிச்சலும், வலியும் ஏற்படும்.

லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது.

மேலும், மத்திம வயதில் இணையும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உறவைத் தாண்டி பல வழிகள் இருக்கின்றன. இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு, படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், பிடித்த நிறங்களில் படுக்கை விரிப்புகள், இனிமையான இசை கேட்பது போன்றவை நல்லுறவுக்கு வித்திடும்.

மனம் சார்ந்த எந்த பிரச்னையையும் உருவாக்கிக் கொள்ளாமல், ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது, சரியான உடற்பயிற்சிகள், அவ்வப்போது உறவில் ஈடுபடுவது போன்றவை வயதானாலும் மனதை இளமையாக வைத்திருக்க உதவும்.

வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே கலவியை மேற்கொள்ள வேண்டும். காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.
Tags:    

Similar News