லைஃப்ஸ்டைல்
கர்ப்பப்பை இறக்கத்திற்கு எவ்வாறான சிகிச்சை முறைகள்

கர்ப்பப்பை இறக்கத்திற்கு எவ்வாறான சிகிச்சை முறைகள்

Published On 2019-12-05 05:32 GMT   |   Update On 2019-12-05 05:32 GMT
இந்தக் கர்ப்­பப்பை இறக்­க­மா­னது பெண்­க­ளது வாழ்க்கைக் காலத்தில் எதிர்­கொள்ளும் முக்­கிய விஷயம். இதனை எவ்­வாறு கையாண்டு பெண்­க­ளுக்­குள்ள சிக்­கல்­களைத் தீர்ப்­ப­தென ஆராய்வோம்.
பெண்ணின் இனப்­பெ­ருக்கத் தொகு­தியின் முக்­கிய உறுப்­பான கர்ப்­பப்பை, அடி­வ­யிற்றுப் பகு­தி­யினுள் பல தசை­க­ளி­னதும், தொடுப்­பி­ழை­யங்­க­ளி­னதும் உத­வி­யுடன் தாங்­கப்­பட்­டுள்­ளது. இத்­தாங்­கு­மி­ழை­யங்­களின் பல­வீ­னத்தால் கர்ப்­பப்பை சற்றுக் கீழி­றங்கி கர்ப்­பப்பை இறக்­க­மாக மாறு­கின்­றது. (whom prolapse) இது பெண்­களைப் பொறுத்­த­வரை மிகவும் ஒரு அசெ­ள­க­ரி­ய­மான நிலை. இதற்குப் பல எளிய முறை­யி­லான தீர்­வுகள் உள்­ளன. ஆனால் பல பெண்கள் இதனை கூச்­சத்­தி­னாலும், வெட்­கத்­தி­னாலும் மற்­ற­வர்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தாது இருப்­ப­துடன் இதற்­கான சிகிச்­சை­களும் சற்றுக் சிக்கல் நிறைந்­த­வை­யாக இருக்­கு­மென நினைத்து தாமே இதனை இறு­தி­வ­ரையில் தமக்­குள்­ளேயே அனு­ப­வித்து வாழ்­ப­வர்கள் பல­ருள்­ளனர்.

ஆனால் இறு­தியில் அவர்கள் மிகவும் முது­மை­ய­டைந்த பின்னர் இந்த கர்ப்­பப்பை இறக்­கத்­தினால் ஏற்­படும் சிக்­கல்­க­ளினால் அவ­திப்­ப­டு­வது மட்­டு­மல்ல அவ­ரைக்­கூட இருந்து பரா­ம­ரிக்கும் அவ­ரது உற­வி­னர்­களும் இடர்­படும் இன்­னல்­களில் பங்­கெ­டுக்க நேரி­டு­கின்­றது. அதா­வது தகுந்த நேரத்தில் இந்த கர்ப்­பப்பை இறக்­கத்தை தகுந்த முறையில் கையாண்டு, சரி­யான தீர்­வு­களை வழங்­காது தவ­ற­வி­டு­வோ­மே­யானால், இறுதிக் காலத்தில் இன்­னல்­களை எதிர்­கொள்ள நேரி­டு­கின்­றது.

ஆகையால் இந்தக் கர்ப்­பப்பை இறக்­க­மா­னது பெண்­க­ளது வாழ்க்கைக் காலத்தில் எதிர்­கொள்ளும் முக்­கிய விடயம். இதனை எவ்­வாறு கையாண்டு பெண்­க­ளுக்­குள்ள சிக்­கல்­களைத் தீர்ப்­ப­தென ஆராய்வோம்.

கர்ப்­பப்பை இறக்­கத்­திற்­கான கார­ணங்கள்

கர்ப்­பப்­பையைத் தாங்கும் இழை­யங்­களும் தசை­களும் பல­வீ­ன­ம­டை­வதே இந்தக் கர்ப்­பப்பை இறக்­கத்­திற்­கான மூல­கா­ர­ண­மாகும். இது சில­ருக்கு பரம்­ப­ரை­யா­கவே பல­வீ­ன­மான இழை­யங்­களைக் கொண்­டி­ருப்­ப­தனால் நடுத்­த­ர­வ­யதைத் தாண்டும் போது ஏற்­ப­டலாம். எனினும் பொது­வான கார­ண­மாக பல குழந்­தை­களை சாதா­ரண பிர­சவம் மூலம் பெற்­றெ­டுத்த தாய்­மா­ருக்கு அதிலும் மிகவும் கடி­ன­மான நீண்ட நேரம் பிர­ச­வங்­களை எதிர்­கொண்ட பெண்­களில், கர்ப்­பப்­பையைத் தாங்கும் இழை­யங்கள் காயப்­பட்டு பல­வீ­ன­ம­டை­வ­தாக ஏற்­ப­டு­கின்­றது. அடுத்­த­தாக மெனோபோஸ் பரு­வத்தை அடைந்த பின் பெண்­களில் ஓமோன்­களின் குறை­பாட்­டினால் இழை­யங்கள் பல­வீ­ன­ம­டை­வதால் இந்­நிலை ஏற்­ப­டலாம். இவ்­வா­றான கர்ப்­பப்பை இறக்கங்­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்தும் கார­ணி­க­ளாக நாற்­பட்ட இருமல், மலச்­சிக்கல் என்­பன பங்­க­ளிக்­கின்­றன.

கர்ப்­பப்பை இறக்­கத்தின் வகைகள்

கர்ப்­பப்பை இறங்­கு­வது போல் யோனி வாசல் சிறு­நீர்ப்பை, சிறு­நீர்­வழி, மலக்­குடல் என்­ப­னவும் கீழி­றங்கி வீக்­க­மாகக் காணப்­படும். கர்ப்­பப்பை இறக்­கமும் பல நிலை­க­ளாக ஆரம்­ப­நிலை, இடைப்­பட்ட நிலை, பிந்­திய நிலை எனும் கட்­டங்­க­ளாகக் காணப்­படும். சிலரில் கர்ப்­பப்பை இறக்கம் மட்டும் காணப்­படும், சிலரில் கர்ப்­பப்பை இறக்­கத்­துடன் சேர்ந்து சிறு­நீர்ப்பை இறக்கம், மலக்­குடல் இறக்கம் போன்­றன காணப்­படும். வேறு சிலரில் கர்ப்­பப்பை இறக்கம் இல்­லாமல் சிறு­நீர்ப்பை இறக்கம் அல்­லது மலக்­குடல் இறக்கம் காணப்­படும்.

கர்ப்­பப்பை இறக்­கத்­தினால் ஏற்­படும் நோய் அறி­கு­றிகள்

கர்ப்­பப்பை இறக்கம் உள்­ள­வர்­களில் யோனி­வாசல் பகு­தியில் ஒரு வீக்கம் போன்று காணப்­படும். இதன்­போது வலி ஏற்­ப­டு­வ­தில்லை. அத்­துடன் இந்த வீக்கம் காலையில் எழுந்­த­வுடன் மிகவும் குறை­வா­கவும் மாலை வேளை­க­ளிலும் கூடி­ய­ளவும் வேலை செய்­கின்ற வேளை­க­ளிலும் இது தெளி­வாகத் தெரியும். சில­வே­ளை­களில் இந்தக் கர்ப்­பப்பை இறக்கப் பகு­தியில் புண் போன்று ஏற்­பட்டு இரத்தம் அல்­லது திரவம் போன்­றன வடிதல் ஏற்­படும். ஆனால் இவை எதுவும் புற்­று­நோய்கள் அல்ல. சிறு­நீர்ப்­பையும் சேர்ந்து இறங்­கி­யுள்­ள­வர்­களில், சிறுநீர் கழிப்­பதில் சிக்­கல்கள், அடிக்­கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, இருமும் போது தும்மும் போதும் சிறுநீர் கட்­டுப்­பா­டின்றி வெளி­யே­றுதல் போன்­றன ஏற்­படும். மேலும் மலக்­குடல் பகுதி இறங்­கி­யுள்­ள­வர்­களில் மலங்­க­ழிப்­பதில் கடி­னங்கள், மலம் பூர­ண­மாகக் கழிக்­கப்­ப­டாமை போன்ற உணர்­வுகள் ஏற்­படும்.

கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கு எவ்­வா­றான சிகிச்சை முறைகள் உள்­ளன?

இதற்­கான சிகிச்­சைகள் பிர­தா­ன­மாக இரு­வ­ழி­களில் மேற்­கொள்­ளப்­படும். அதா­வது கர்ப்­பப்பை இறக்­கத்தை உயர்த்தி அதனை தாங்கக் கூடிய வளை­யங்கள் (Pessary) போடப்­ப­டலாம். இதன் பின் இவற்றை 3 மாதங்­க­ளுக்கு ஒரு தடவை மாற்­ற­வேண்டும். இதன்­போது சத்­தி­ர­சி­கிச்­சைகள் தவிர்க்­கப்­ப­டலாம். ஆகையால் இந்த வளை­யங்கள் போடப்­படும் முறை, சத்­திர சிகிச்­சை­க­ளுக்குத் தாக்­குப்­பி­டிக்க முடி­யாத உடல் வாகைக் கொண்­ட­வர்­க­ளுக்கும், சத்­தி­ர­சி­கிச்­சைக்கு தயங்­கு­ப­வர்­க­ளுக்கும், சத்­தி­ர­சி­கிச்­சைக்­காக காத்­தி­ருக்கும் காலப்­ப­கு­தி­யிலும், பிர­ச­வத்தை தொடர்ந்து ஏற்­படும் தற்­கா­லிக கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கும், கர்ப்ப காலத்தில் ஏற்­படும் கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கும் பெரிது உத­வி­ய­ளிக்கும் சிகிச்சை முறை­யாக காணப்­ப­டு­கின்­றது.

மற்­றைய சிகிச்சை முறை­யாக சத்­தி­ர­சி­கிச்சை முறை உத­வி­ய­ளிக்கும். இதிலும் கர்ப்­பப்­பையை முற்­றாக அகற்­றாமல் செய்­யப்­படும் சத்­தி­ர­சி­கிச்சை, கர்ப்­பப்­பையை முற்­றாக அகற்றும் சத்­தி­ர­சி­கிச்­சை­யென இரு­வ­கைகள் உள்­ளன. இது ஒருவர் தனது குடும்­பத்தை முடித்துக் கொள்­வதா அல்­லது இல்­லையா என்­ப­தனைப் பொறுத்துத் தீர்­மா­னிக்­கப்­படும். இந்த சத்­தி­ர­சி­கிச்­சை­களில் சிறந்­தது கர்ப்­பப்­பையை அகற்றி கர்ப்பப்பை பகுதி தசை­களை மறு­சீ­ர­மைக்கும் சத்­தி­ர­சி­கிச்­சையே சிறந்­தது. இது ஒரு­வரை முழு­தாக மயக்­காமல் முதுகுப் பகு­தியில் ஊசி ஏற்றி உடம்பின் கீழ்ப்­ப­கு­தியை விறைக்கப் பண்­ணு­வதன் மூலம் இந்த சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்­ளலாம். இதன்­மூலம் மிகவும் வயது கூடிய பெண்­களில் கூட எந்­த­வித சிக்­க­லின்றி இந்த சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.
Tags:    

Similar News