லைஃப்ஸ்டைல்
மாரடைப்பு வருவதற்கு பெண்களின் வாழ்வியல் முறையும் காரணம்

மாரடைப்பு வருவதற்கு பெண்களின் வாழ்வியல் முறையும் காரணம்

Published On 2019-11-19 03:07 GMT   |   Update On 2019-11-19 03:07 GMT
மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய காரணமாகும்.
நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்பு ஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்பர். வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், திடீரென்று மூச்சு வாங்குதல், வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை, டிரெட்மில் எனப்படும் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும். இப்பரிசோதனைகளின் போது நமது நாடித்துடிப்பு 100-க்கும் மேல் செல்லும். எனவே இதயத்தின் வேலைப்பளு கூடுகிறது. இவ்வாறு கூடும்போது, இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா? என தெரிந்துகொள்ளலாம். இதயத்திற்குரிய முக்கிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் இதயத்தின் சிறுகோளாறுகளை கூட உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். வலியில்லா மாரடைப்பை தவிர்க்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு. மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய காரணமாகும். பல பெண்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை. மாறாக தொலைக்காட்சியில் அதிக நேரம் மூழ்கிவிடுகின்றனர். அப்போது ஏதாவது நொறுக்குத்தீனியையும் சாப்பிடுகின்றனர். மேலும் இப்போதைய பெண்கள் எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர். சிறிய வி‌‌ஷயங்களை கூட சகிக்கும் தன்மை இல்லை. எனவே பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபட வேண்டும்.
Tags:    

Similar News