லைஃப்ஸ்டைல்
பிரசவத்தின் பின் எப்போது மாதவிடாய் தொடங்கும்

பிரசவத்தின் பின் எப்போது மாதவிடாய் தொடங்கும்

Published On 2019-11-15 03:35 GMT   |   Update On 2019-11-15 03:35 GMT
பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.
பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள். அவர்கள் முந்தைய ஒன்பது மாதங்களில் மாதவிடாய் இல்லாமல் இருந்திருப்பார்கள். புதிதாக அம்மாவானவர்கள் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஆச்சரியப்படுவார்கள். இங்கு அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், தாய்ப்பாலூட்டுவது எப்படி மாதவிடாயை பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.  

கர்ப்பகாலத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெண்களுக்கு இந்த 9 மாதமும் மாதவிடாய் ஏற்படாது என்பது தான். அவர்கள் துணிகளையோ அல்லது நாப்கின்களையோ இந்த மாதங்களில் மாற்ற வேண்டியிருக்காது. இந்த சமயத்தில் இது அவர்களுக்கு விடுதலை அளித்திருந்தாலும், பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படலாம். இதற்கென எந்த தேதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு பெண்ணின் உடலும் அவர்களுக்கென தனி அட்டவணையுடன் இயங்கி கொண்டிருக்கிறது.

தாய்ப்பாலூட்டும் போது மாதவிடாயானது அதிகபட்சமாக 7 முதல் 8 மாத காலம் வரை நீடிக்கிறது. சில பெண்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்கு பிறகே ஏற்படுகிறது. ஆனால், இதை பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. உங்கள் உடலுக்கான நேரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திருப்பிவிடுவீர்கள்.

1 உங்கள் குழந்தை தாய்ப்பால் குடித்தும் அதிக நேரம் உறங்கினால், உங்களுக்கு மாதவிடாய் விரைவில் ஏற்படும்.

2 உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டால், உங்கள் மாதவிடாய் முடிவடைய போகிறது என்பதன் அறிகுறியாகும்.

சில நேரங்களில் தாய்ப்பாலூட்டும் போது, நீங்கள் இரத்த கறைகளை கவனித்திருப்பீர்கள். இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். இந்த கறைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும், இதற்கென நேரம் காலம் எல்லாம் கிடையாது.

குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது. இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
Tags:    

Similar News