லைஃப்ஸ்டைல்
தைராய்டு நோயும் பெண்கள் உடல் எடையும்

தைராய்டு நோயும் பெண்கள் உடல் எடையும்

Published On 2019-10-25 03:30 GMT   |   Update On 2019-10-25 03:30 GMT
பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன் உடல் மெலிவாக, அழகாக இருப்பார்கள். திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தை பிறந்தவுடன் இடுப்பு சதை, வயிற்றுச் சதை வித்தியாசம் தெரியாமல் குண்டாகி விடுகின்றனர். என்ன காரணம் தீர்வு என்ன? உடல் எடை உடனே குறைய மாத்திரைகள் சாப்பிட்டு அதன் பக்க விளைவாக கிட்னி ஒழுங்காக இயங்குவதில்லை. பெண்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலில் தைராய்டு. பாரா தைராய்டு தொண்டை உள் பகுதியில் உள்ளது.

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். உடல் வளர்ச்சி ஒழுங்காக இருக்காது. சோம்பேறியாக இருப்பார்கள். தலைமுடி கொட்டும். இருதயத் துடிப்பு சீராக இருக்காது. எப்பொழுதும் வியர்வை வியர்த்துக் கொண்டேயிருக்கும். தைராலீய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் உடல் எடை குறைந்து கொண்டே வரும். கண்கள் பிதுங்கி நிற்கும். உடல் சோர்வுடன் காணப்படுவர்.

பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பதோடு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும். மன அமைதியின்றி தவிப்பர். பார்த்தீர்களா! இந்த தைராய்டு சுரப்பியால் உடல் எடை கூடுகின்றது, குறைகின்றது. இதற்குத் தீர்வு இந்த சூன்ய முத்திரையால் கிடைக்கும்.

பெண்கள் உடல் எடை குறையவும், அழகாக திகழவும், தலை முடி கொட்டாமல் கரு கருவென்று வளரவும், கருப்பபை வியாதி நீங்கி குழந்தைப்பேறு பெறவும் இந்த சூன்ய முத்திரயை தினமும் மூன்று வேளை செய்யுங்கள். இதுதான் இளமையின் சூட்சுமம் (ரகசியம்). மறவாதீர்கள்.

முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும்.

பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தை பார்க்க) இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.
Tags:    

Similar News