லைஃப்ஸ்டைல்

நாப்கினை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரும் யூரினரி இன்பெக்‌ஷன்

Published On 2017-12-26 03:47 GMT   |   Update On 2017-12-26 03:47 GMT
இன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேண்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது.
பீரியட்ஸின்போது பெரும்பாலும் துணி பயன்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால், பெண்களுக்குப் பல சுகாதாரக் குறைபாடுகள், பிரச்சனைகள் உண்டாகின. நம் ஊரில் ஒரு நாப்கின் முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதில்லை. இது தவறான பழக்கம். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும். குறைந்தபட்சம் 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை வைத்திருக்கலாம். அதற்கு முன்பே நனைந்து கசகசப்பு வந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது. 

ஒரு சிலர் ஈர கசகசப்பைத் தவிர்க்க, சிந்தெடிக் லேயருடன் வருகிற பேட்களை வைக்கிறார்கள். ஈர உணர்வுதான் இல்லையே என மாலை வரை ஒரே நாப்கினை வைத்திருக்கிறார்கள். இதனால், அரிப்பு, அலர்ஜி உண்டாகும். காட்டன், சிந்தெடிக் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்த்தால், காட்டன்தான். 

இன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேன்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது. இன்பெக்‌ஷனும் உண்டாகலாம். ஒரு நாப்கினை நீண்ட நேரம் வைத்திருந்தால், சிலருக்கு யூரினரி டிராக்கில் இன்பெக்‌ஷன் உண்டாகும். 



இந்தச் சமயத்தில், 'அடிக்கடி யூரின் போகவேண்டியுள்ளதே' எனத் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பது தவறு. தண்ணீரும் குடிக்காமல், பேடையும் நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது ஆரோக்கியமல்ல. வேலைப் பரபரப்பில், நிறையப் பெண்கள் இந்தத் தவற்றை செய்கிறார்கள். 

சில பெண்கள் பீரியட்ஸ் சமயத்தில், பிறப்பு உறுப்பில் வெப்பமாக பீல் பண்ணுவார்கள். இதை இன்பெக்‌ஷன் என்று நினைத்துப் பயந்துவிட வேண்டாம். சிலருக்குப் பிறப்பு உறுப்பு ரணமாகி, குளிர்ந்த நீர் பட்டாலும், திகுதிகுவென்று எரியும். இதுவும் யூரினரி இன்பெக்‌ஷன் கிடையாது. பீரியட்ஸ் சமயத்தில் இப்படி ரணமாவது சகஜமே. 

முதல் நாளில் ரத்தப்போக்கைப் பொறுத்து, அடிக்கடி பேட் வைத்துக்கொள்ளூம் பெண்கள், மூன்றாம் நாளில் ரத்தப்போக்கு குறைந்துவிட்டது என்று ஒரே பேடையே பயன்படுத்துவது தவறு. 

நாப்கினைப் பொறுத்தவரை விலை அதிகமானது, குறைவானது என்று கிடையாது. எது உங்களுக்கு அரிப்பை, அலர்ஜியை தரவில்லையோ, அதைப் பயன்படுத்துங்கள். 

Tags:    

Similar News