லைஃப்ஸ்டைல்

அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க...

Published On 2017-06-03 04:03 GMT   |   Update On 2017-06-03 04:03 GMT
மாதவிலக்கு நாட்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். இந்த நாட்களில் பெண்கள் சில குறிப்பட்ட வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது.
மாதவிலக்கு என்பது பெண்களுக்கு உடல் ரீதியாக உண்டாகக்கூடிய இயற்கை சுழற்சி முறை. அந்த சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள்.

சிலருக்கு இடுப்பு வலி உண்டாகும். சில பெண்களுக்கு தீராத வயிற்றுவலி உண்டாகும். அந்த சமயங்களில் உடலுக்கு ஆற்றல் அதிகம் தேவை. ஆனால் பலரும் மாதவிலக்கு நாட்களில் சரியாக சாப்பிடுவதில்லை. சிலர் என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் எதையாவது சாப்பிட்டு வலியை இன்னும் கொஞ்சம் கூடுதலாக்கிக் கொள்கிறார்கள்.

சில உணவுகளைத் தவிர்த்தாலே மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.



பெருநகரங்களில் வாழ்கிற பல பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் இந்த மாதவிலக்கு நாள்களில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். அது மாதவிலக்கு சமயத்தில் அவர்களுக்கு பெரும் அசெளகர்யத்தை ஏற்படுத்திவிடும்.

பேக்கிங் பொருட்களான பிரட், கேக், பன் போன்றவற்றை கட்டாயம் மாதவிலக்கு நாட்களில் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றுவலியை உண்டாக்கும்.

டின்களில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட எந்த உணவுகளையும் சாப்பிடவே கூடாது. அவற்ரைற அறவே ஒதுக்க வேண்டும். அதில் அதிக அளவு சோடியம் கலக்கப்பட்டிருக்கும். அது மாதவிலக்கு நாட்களில் வயிற்று உபாதைகளை உண்டாக்கிவிடும்.

காபி ஒருவகையில் ஊக்கத்தைக் கொடுத்தாலும் அது முறையற்ற மாதவிலக்கை உண்டாக்கிவிடும். அதனால் மாதவிலக்கின்போது காபியை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
Tags:    

Similar News