லைஃப்ஸ்டைல்

மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஏன்?

Published On 2017-02-03 04:02 GMT   |   Update On 2017-02-03 04:02 GMT
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.

அத்தகைய மாற்றத்தின் போது, பெண்கள் உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

உடலில் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் அடைவதால், மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி, ஒருவித வலியை ஏற்படுத்துகிறது. இதுதவிர திடீரென உடல் எடை அதிகரித்த மாதிரியான எண்ணம் உருவாகும்.

மாதவிடாய் வருவதற்கு 4 நாட்கள் முன்பாக கருமுட்டை வெளிவருவதும் ஒரு காரணமாகும்.

சிலருக்கு தலைவலி, கால்வலி, அதிக பசி, முதுகுவலி, பருக்கள், உடல் உபாதைகள் போன்ற பிரச்சனைகளும் கூட ஏற்படுவது உண்டு, இதற்கும் ஹார்மோன்களின் மாற்றமே காரணமாகும்.

இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, நாம் தினமும் சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்து வருவது நமது உடல் மற்றும் மனதிற்கு நல்ல பயனளிக்கும்.

Similar News