லைஃப்ஸ்டைல்

பெண்களே காலை உணவு கட்டாயம் தேவை

Published On 2017-01-22 03:55 GMT   |   Update On 2017-01-22 03:55 GMT
காலை வேளையில் பணிக்கு செல்லும் அவசரத்தில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் அரைகுறையாக காலை உணவை முடித்துக்கொள்ளும் பெண்கள் அதிகம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் இரட்டிப்பு பணிச்சுமையை சுமக்க வேண்டியிருக்கிறது. காலையில் அவசர, அவசரமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் வேலையை தொடர வேண்டியிருக்கிறது.

காலை வேளையில் பணிக்கு செல்லும் அவசரத்தில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் அரைகுறையாக காலை உணவை முடித்துக்கொள்ளும் பெண்கள் அதிகம். அவர்களால் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும் நேரம் ஒதுக்கமுடியாமல் போய்விடுகிறது. அதுவே அவர்கள் உடல் பலகீனமாக காரணமாகி பல்வேறு வியாதிகள் தொற்றிக்கொள்ளவும் வழிவகுத்துவிடுகிறது. பெண்கள் ஒருபோதும் காலை உணவை தவிர்க்கவோ, குறைத்து கொள்ளவோ கூடாது.

காலை உணவை போதுமான அளவு சாப்பிட முடியவில்லை என்றால் பழ வகைகள் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் குளுக்கோஸ் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். அத்துடன் உலர் பழவகைகள் சாப்பிடுவதும் உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்.

காலை வேளையில் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கமுடியாவிட்டாலும் மதிய சாப்பாட்டு வேளையின்போது சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் வாரத்தில் நான்கு நாட்கள் அரைமணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு எப்படியாவது நேரத்தை ஒதுக்கிட வேண்டும்.

உடல் இயக்கம் சீராக நடைபெற தண்ணீரின் பங்களிப்பு அவசியமானது. அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நொறுக்கு தீனிகள், சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள், அரிசி சாதம் போன்றவற்றை அளவோடு உண்ண வேண்டும். அவை இன்சூலினை அதிகம் சுரக்க வைத்து உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும்.

Similar News