லைஃப்ஸ்டைல்

கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்

Published On 2016-10-17 06:30 GMT   |   Update On 2016-10-17 06:30 GMT
கணவரின் சில செயல்கள் மனைவியின் மூட் அவுட்டாகி அவர்களின் மனநிலையை பாதிக்கும். அத்தகைய செயல்கள் என்னவென்று பார்க்கலாம்.
சில சாதாரன விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு பெண்கள் மூட் அவுட்டாவது ஒரு வகை. சில பெரிய விஷயங்களை மிக சாதாரணமாக கூறி பெண்களை ஆண்கள் மூட் அவுட்டாக்குவது இரண்டாவது வகை. இந்த இரண்டு வகையிலும் பெண்கள் தான் மூட் அவுட்டாகிரார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெஸ்ஸிங்கில் இருந்து தாம்பத்தியம் வரை ஆண்கள் தெரிந்தோ, தெரியாமலோ சில விஷயங்களை விளையாட்டாக செய்ய போக, அது வினையாகி மனைவி மனம் வருத்தம் அடைய நேரிடுகிறது. அது என்னென்ன செயல்கள் என்று இனிப் பார்க்கலாம்...

பெண்களை பொறுத்தவரை அவர்களது டிரெஸ்ஸிங் சென்ஸை எக்காரணம் கொண்டும் யாரும் கிண்டலடித்து விடக் கூடாது. அதற்காக தான் நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். கணவனாகிய நீங்கள் அவர்களின் உடையை பற்றி கலாய்த்தால் சண்டை வெடிக்கும்.

சும்மாவே மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வலி மற்றும் மூட் ஸ்விங் காரணத்தால் சோர்வாகவும், மனநிலை சீரற்று இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களை சீண்டி பார்ப்பது, பழைய கதை பேசி நோகடிப்பது, கோபத்தை காட்டுவது என இருந்தால் நிமிடத்தில் அல்ல நொடியில் மூட் அவுட்டாகிவிடுவார்கள்.

உடலுறவில் ஈடுபடும் போது, எக்காரணம் கொண்டும் உங்கள் துணையின் மனநிலை மற்றும் உடல்நிலை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்ள வேண்டாம். இந்த விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வது மூட் அவுட்டாக்குவது மட்டுமில்லாமல், உங்களையும் அவுட்டக்கலாம்.

Similar News