லைஃப்ஸ்டைல்

மகளிர் மேம்பாட்டுக்கான வழிகள்

Published On 2016-10-04 02:34 GMT   |   Update On 2016-10-04 02:34 GMT
கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
கிராமப்புற பெண்களுக்கு சமூக நியாயம் மற்றும் ஆண்களுக்கு இணையான சமன்பாட்டினை உருவாக்க வேண்டுமென்பது, மத்திய, மாநில அரசுகளின் சமூக நலத்திட்டங்களின் அடிப்படைக் குறிக்கோள்களுள் ஒன்றாக இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு மற்றும் சுயசார்பினை அதிகரிக்கும் வழிமுறைகளும், இத்திட்ட செயலாக்கத்தின் அனைத்து மட்டங்களிலும், முறையாக தேவைப்படுகிறது.

குறிப்பாக கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி, கணினிக்கல்வி, அறிவுசார்ந்த பயிற்சிகள், தகவல் பரிமாறுதலுக்கான வாய்ப்பு மற்றும் அது தொடர்பான வலைத்தளம், மேலும் ஆளுமை வளர்ச்சியுடன் இணைந்த தனிப்பட்ட முறையிலான முன்னேற்றம் ஆகியவை தொடர்பான இலவச கல்வி முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.

சுகாதாரப்பணி :

நடமாடும் மருத்துவமனைகள், நவீன ஆரம்ப சுகாதார மருத்துவ சாதனங்களைக் கொண்டு செயல்படவேண்டும். அப்போதுதான் கிராம சமுதாயத்தின் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெருமளவு மேம்பாடு அடையும்.

பொருளாதார மேம்பாடு :

கைவினை பொருட்கள் தயாரிப்பு வர்த்தகம் ஆகியவையும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக் கப்பட்ட கிராமப் புறப்பெண்களுக்கு தொழில்முறைக்கல்வி வழங்குவதனால் அவர்களின் இயல்பான தனித் துவம் வாய்ந்த படைப்புத்திறன் அழிந்துவிடாமல் ஊட்டி வளர்க்கப்படும். மேலும் அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய வகை செய்கிறது. மேலும் கிராமப்புற இந்தியாவின் வளமான பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் :

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இளம்பெண்கள் மற்றும் மகளிருக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான பதில் நடவடிக்கைகளில், அவர்களை முழு வீச்சில் ஈடுபடச்செய்யவேண்டும். எனவே நம் பூமியின் வளங்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கு இருக்கும் முக்கியப்பங்கு குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதில் வெற்றி பெறலாம்.

Similar News