லைஃப்ஸ்டைல்

பெண்கள் இறுக்கமான உடை அணிந்தால் ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2016-09-21 02:10 GMT   |   Update On 2016-09-21 02:10 GMT
பெண்கள் இறுக்கமான உடை அணிந்தால் என்னனென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர்.

ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும்.

அணியும் உள்ளாடைகள், காலணி உறைகள் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும். உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.

ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.

Similar News