லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீங்க

Published On 2016-09-08 07:32 GMT   |   Update On 2016-09-08 07:32 GMT
கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது, வாசனை திரவியம் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் சாப்பிடுவது என அனைத்தும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.
நாம் இன்று உயர்ந்த தொழில்நுட்பம் என்ற பெயரில் பயன்படுத்தி வரும் பல பொருட்கள் நமக்கே தெரியாமல் நமது உடலுக்கு தீய விளைவகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாம் தினமும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டில் துவங்கி, ஆண்டி-பாக்டீரியா சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள், வாசனை திரவியம் என நீள்கிறது.

சாதாரண மக்களை விட கர்ப்பிணி பெண்கள் மத்தியில் தான் அதிக தாக்கங்களை உண்டாக்குகிறது, குறிப்பாக கருவில் வளரும் சிசுவிற்கு. கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது, வாசனை திரவியம் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் சாப்பிடுவது என அனைத்தும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.

ஃப்தலெட்ஸ் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் கலப்பு கொண்டிருக்கும் பொருளாகும். டிடர்ஜென்ட், பெயின், காஸ்மெடிக்ஸ் மற்றும் உணவு பேக்கிங் செய்ய உதவும் பொருட்கள், போன்றவற்றில் இந்த ஃப்தலெட்ஸ் கலப்பு இருக்கிறது. நீண்ட நாட்கள் பயனளிக்க, சேதமடையாமல் இருக்க இது பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்துவதால் சிசு வளர்ச்சியில் தாக்கம் மற்றும் கருகலைப்பு ஆகும் அபாயமும் இருக்கிறது என கூறப்படுகிறது.

முடிந்த வரை பிளாஸ்டிக் கண்டெயினர்கள், டின் கேன்கள், செயற்கை வாசனை திரவியங்கள், இரசாயன டிடர்ஜெண்ட்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மை, பாட்டில்களிலும் கூட ஃப்தலெட்ஸ் கலப்பு இல்லாத பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

முடிந்த வரை, ஆர்கானிக் உணவுகளை உண்ணுங்கள். மேலும், ஷாம்பூ, சோப்பு, லோஷன் போன்றவற்றை கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

மிகவும் மோசமான கெமிக்கல் இந்த டிரைக்ளோசான். நாம் பயன்படுத்தும் ஆண்டி-பாக்டீரியா சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவற்றில் இது கலப்பு கொண்டிருக்கிறது. பல ஆய்வுகளில் இந்த கெமிக்கல் தீய பக்கவிளைவுகள் ஏற்படுத்துகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. இது வளரும் சிசுவின் உடலில் தைராயிடு பிரச்சனை உண்டாக காரணியாக இருக்கிறது.

நாம் கை கழுவ பயன்படுத்தும் திரவியம், சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவற்றில் இதன் கலப்பு உள்ளது. எனவே, கர்ப்பக் காலத்தில் இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

பி.பி.எ, இந்த கெமிக்கல் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களில் கலப்பு கொண்டுள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் தாக்கம் ஏற்படுத்துகிறது. இது, சிசுவின், மூளை வளர்ச்சியை கெடுக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும், இது சிசுவின் உடல் எடை குறைவாக பிறக்கவும் ஓர் காரணியாக விளங்குகிறது.

பல் மேற்பூச்சுகள், பிளாஸ்டிக் மற்றும் டின் வகையிலான பொருட்களால் அடைக்கப்பட உணவு / பானம் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.

Similar News