லைஃப்ஸ்டைல்

கருப்பை புற்றுநோய்... புதிய வெளிச்சம்

Published On 2016-08-27 02:44 GMT   |   Update On 2016-08-27 02:44 GMT
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோயை அதன் தொடக்க நிலையிலேயே அறிய உதவும் புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோயை அதன் தொடக்க நிலையிலேயே அறிய உதவும் புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கருப்பை புற்றுநோய், கருமுட்டையை உற்பத்தி செய்யும் பகுதியில் தோன்றுகிறது. இது வயிற்றுப் பகுதியில் மறைந்து வளர்ச்சி அடைவதால் இதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.

கருப்பை புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடிந்தால், ‘கீமோதெரபி’ மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் கீமோதெரபி மூலம் குணப்படுத்த முடியாத நிலையை அடைந்தால் உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

கருப்பை புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டு 3 வருடங்கள் வரையில் அதை இனம் காண்பது கடினம் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போதைய ஆய்வில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.ஓ.எக்ஸ். 2 என்ற புரதம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் புரதத்தின் அளவை தெரிந்துகொள்வதன் மூலம், ஆரம்பத்திலேயே கருப்பை புற்றுநோயை கண்டுபிடித்துக் குணப்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Similar News