பெண்கள் உலகம்

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

Published On 2016-07-04 12:55 IST   |   Update On 2016-07-04 12:55:00 IST
இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்க்கலாம்.
தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது குழந்தை பெறலாமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. இதைப் பற்றிக் கேட்கும் போது சிலர் பெறலாம் என்றும், சிலர் பெறக் கூடாது என்றும் சொல்கின்றனர்.

இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்க்கலாம்.

இதய நோயுள்ளப் பெண்களை இரு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று பிறக்கும் போதே இதய நோய் இருப்பவர்கள், மற்றொன்று பிறந்த பிறகு இதய நோய் வந்தவர்கள். பெண்களின் உடலில் சாதாரணமாக 5.5 லிட்டர் இரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்தில் 10-12 வாரங்களிலேயே 30% அதிகமாகத் தொடங்கும்.

இந்த நேரத்தில் இதயம் பம்ப் பண்ற வேகத்தில் இதயத்துடிப்பு அதிகமாகி இரத்த குழாய்கள் விரிவடையும். ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இதய நோய் இருக்கிறவங்களால், இதனை தாங்க முடியாது. அனைத்தையும் அலட்சியப்படுத்தி கர்ப்பம் ஆகும் பெண்களுக்கு 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம்.

மேலும் அவர்கள் இதயம் இன்னும் பழுதடையலாம். சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம். சொல்லப்போனால், பிறவியிலேயே இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது மற்றும் இதயத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் கர்ப்பம் தரிப்பது ரிஸ்க்.

இதய அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்த பெண்கள் கர்ப்பம் தரிக்கலாம். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்ப காலம் முழுவதும் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில பிரசவ காலத்தைச் செலவழித்தால் நல்லது. சிலர் அறுவை சிகிச்சை செய்த பிறகு, தினமும் மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.

அந்த மருந்துகளை சாப்பிடும் போது அவர்கள் கர்ப்பம் தரிப்பது சிரமம். ஆகவே கர்ப்பம் எத்தனை ரிஸ்க்கான விஷயமோ, அதைவிட ஆபத்தானது இதய நோயுள்ள பெண்களுக்குக் கருத்தடை. இதனை அந்த பெண்களுக்கு செய்யாமல், அவர்கள் கணவர்களுக்கு செய்தால் மிகவும் பாதுகாப்பானது.

Similar News