பெண்கள் உலகம்

கர்ப்ப காலத்தில் வாக்கிங் செல்வது நல்லதா?

Published On 2016-06-28 11:23 IST   |   Update On 2016-06-28 11:23:00 IST
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அதிலும் முக்கியமாக தினமும் வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் சில நேரங்களில் மிகவும் மன வேதனையை சந்திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்வதன் மூலம் சரிசெய்யலாம். எப்படியெனில் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் மூளையில் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோர்பின்கள் வெளியிடப்படும்.

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வாக்கிங் மேற்கொள்வதால், இந்த மலச்சிக்கல் பிரச்சனை குறையும். எனவே தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகுந்த சோர்வையும், பலவீனத்தையும் பெண்கள் சந்திப்பார்கள். இக்காலத்தில் போதிய அளவில் ஓய்வை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் சிறு தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் சோர்வு தடுக்கப்பட்டு, உடல் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.

கர்ப்பிணி பெண்கள் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இரத்த அழுத்தமானது சீரான அளவில் பராமரிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சரியாக தூக்கம் வராது அவதிப்படுவார்கள். ஆனால் தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தாயின் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுவதோடு, குழந்தையின் எடையும் கட்டுப்படுத்தப்படும். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Similar News