பெண்கள் உலகம்

மாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?

Published On 2016-06-15 10:51 IST   |   Update On 2016-06-15 10:52:00 IST
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் பல்வேறு தொல்லைகளை அனுபவிக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.
* தலைவலி அல்லது தலை பாரம்
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்பு அல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்

சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.

* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம்.

* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள்.

என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும். செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.

Similar News