பெண்கள் உலகம்

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

Published On 2016-04-29 07:21 IST   |   Update On 2016-04-29 07:21:00 IST
இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல.
இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று சொல்ல முடியாது.

அது கருமுட்டை மற்றும் விந்துவை பொறுத்ததுடன், பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. இப்போது இந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி காண்போம்.

இரட்டையர்களின் வகைகள் :

இரட்டை குழந்தைகளிலேயே இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

ஒன்று போலிருக்கும் இரட்டை

வேறுபாடுள்ள இரட்டை.

ஒன்று போலிருக்கும் இரட்டையர்கள் :

இந்த வகையான இரட்டையர்களைப் பார்த்தால், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதாவது இந்த வகை குழந்தைகள் ஒரே ஒரு விந்தணுவின் மூலம் பிறப்பார்கள். அதாவது ஆணிடமிருந்து வெளிப்படும் ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் ஒரே ஒரு செல் மட்டும் கருமுட்டையினுள் சென்று இணையும். அப்படி இணையும் போது சில சமயங்களில் இயல்புக்கு மாறாக கருமுட்டையானது இரண்டாக பிரியும். இப்படி இரண்டாக பிரிந்த கருமுட்டை குழந்தைகளாக உருவாகும்.

ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் :


ஒருவேளை கருமுட்டையானது முழுமையாக இரண்டாக பிரியாமல் போனால் தான், குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இந்த செயல்பாட்டில் ஒரு கருமுட்டையும், ஒரு விந்தணுவும் மட்டும் இருப்பதால் தான், இந்த வகையான இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள். இருப்பினும் இவர்களுக்கிடையேயும் ஒருசில வேறுபாடுகள் இருக்கும். அதில் ஒன்று குழந்தைகளுக்கு செல்லும் ஊட்டச்சத்துக்களின் அளவைப் பொறுத்து,
வேறுபாடுள்ள இரட்டையர்கள்

பெண்களுக்கு மாதந்தோறும் ஒரே ஒரு சூல்முட்டை வெளிப்படும். சில சமயங்களில் இரண்டு சூல்முட்டைகள் வெளிப்படும். அப்படி வெளிப்படும் தருணம், பெண் உறவில் ஈடுபட்டால், இரண்டு சூல்முட்டைகளில் இரு வேறு விந்தணுக்கள் நுழைந்து குழந்தைகளாக உருவாகின்றன. ஆனால் இந்த வகையான இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒன்று போல் காணப்படமாட்டார்கள் மற்றும் அவர்களின் பண்புகளும் வேறுபட்டு காணப்படும்.

Similar News