பெண்கள் உலகம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஆபத்து அறிகுறிகள்

Published On 2016-04-02 12:04 IST   |   Update On 2016-04-02 12:05:00 IST
கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலில் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் இதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது. சில உணவுகளை உண்ணக் கூடாது.
கர்ப்ப காலத்தில் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். இதை சாதரணமாக நினைத்து விடக்கூடாது இதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

கால்வீக்கம் :

கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை குழந்தையை சுமப்பதற்காக அதிகரிக்கும். அப்போது அதிகரிக்கும் போது கால்கள் பெண்ணின் எடையை சுமக்கும் போது கெண்டைக் கால்கள் வீங்கி விடுகின்றது. இதை சாதரணமாக மருந்துகளைப் போட்டு தேய்த்து சரிசெய்து விடலாம். மீண்டும் வலி நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

கடுமையாக இரத்த சோகை :

கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து பகிரப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்து இரத்தச் சோகை ஏற்படும் நல்ல பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கவேண்டும். இரத்தச்சோகையால் உடல் சோர்வாகிவிடும். இதை முதலில் கவனிக்க வேண்டும்.

இரத்தக் கசிவு :

இந்த இரத்தக் கசிவு என்பது கருப்பையில் இருந்து வரக்கூடியது. மாதவிடாய்க்காலத்தில் வரும் இரத்தக் கசிவு கரு உண்டானப்பிறகு வரக்கூடாது. சிசுவிற்கு ஏதாவது பிரச்சினை என்றால் கரு சிதைந்து விடும். இரத்தக் கசிவை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

அடி வயிற்று வலி :

பெண்களின் பிரச்சினையே அடி இறக்கம் தான். அதுவும் பேறு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி கர்ப்பபையில் இருந்து வருவது. குறைமாத பிரசவம், அரைகுறை பிரசவம் போன்றவைகள் ஏற்பட இந்த வயிற்றுவலி தான் காரணம். வலி தாங்க முடியவில்லை என்றால் கைவைத்தியம் பலிக்காது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வாந்தி மற்றும் பேதி :

கர்ப்பம் தரித்த முதன்மை மாதங்களில் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை வருவது இயல்பு தான் ஆனால் கர்ப்பம் வளர்ந்தப் பின் வரும் வாந்தி மற்றும் பேதி ஆகியவை உணவு செரியாமை மற்றும் உணவில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் வரக்கூடியது.

வலிப்பு :

சிறு வயதில் தாய்மை அடைதல், போதிய சத்துக்கள் இல்லாததால் வலிப்பு நோய் வருகின்றது. இது பிரசவத்திற்கு முன்னரும் பின்னரும் வரக்கூடாது. இது இரணஜன்னி என்று பெயர் கூறுவர். இதை எக்காரணம் கொண்டும் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது தாய்க்கும் சேய்க்கும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும்.

அசைவு :

சரியாக 7 மாதத்திற்கு மேல் குழந்தையின் அசைவு ஆரம்பித்துவிடும் அசைந்து கொண்டு இருந்த குழந்தை திடீரென்று அசையாமல் இருந்தால் உடனே டாக்டரை அணுகவும் அல்லது வேகமாக அசைந்தாலோ அல்லது உதைத்தாலோ ஆபத்துதான்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவரை அணுகி கவனிக்கவும்.

Similar News