பெண்கள் உலகம்

ஒரு நாட்டில் ஆண்களைவிட பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்களா?

Update: 2023-01-27 04:15 GMT
  • பெண்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை.
  • அதிக நேரம் செய்ய வேண்டிய வேலையை ஆலைகள் பெண்களுக்கு அளிக்கின்றனவாம்.

ஆண்களையும் பெண்களையும் பணியில் சமமாக நடத்த வேண்டியதன் அவசியம் பற்றி பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து பட்டியலிட்டது.

95 நாடுகளில் ஆய்வு செய்ததில் 40 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதாவது, 1. வேலையில் சமத்துவம், 2. பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புள்ள துறைகள் அல்லது அத்தியாவசிய துறைகள், 3. சட்டப்பூர்வமான பணி பாதுகாப்புள்ள துறைகள் அல்லது அரசியல் ரீதியாக பாதுகாப்பு தேடக்கூடிய துறைகள், 4. உடல் ரீதியாக தீங்கு விளைவிக்காத வேலைகள் அல்லது சுயமாக செயல்பட வாய்ப்புள்ள வேலைகள் என்று 4 பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நல்ல நிறுவனங்கள், அதிக ஊதியம் தரும் நிறுவனங்கள் அனைத்தும், அதிக எண்ணிக்கையில் பெண்களை பணிக்கு தேர்வு செய்வதில்லை.. அப்படியே பணி வழங்கினாலும் பெண்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை.

அதிக நேரம் செய்ய வேண்டிய வேலை, சலிப்பு ஏற்படுத்தும் வேலை, உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வேலை, இழிவு என்று கருதத்தக்க வேலை, முக்கியத்துவம் அற்ற வேலை போன்றவற்றையே பல நிறுவனங்கள், ஆலைகள் பெண்களுக்கு அளிக்கின்றனவாம்.

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ உதவி, கைக்குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் வசதி, போக்குவரத்து வசதி, காப்பீட்டு வசதி போன்றவையும் சரியாக செய்து தரப்படுவதில்லையாம்.

ஒரு நாட்டில் ஆண்களைவிட பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை அறிய பின்வரும் அம்சங்கள் உதவுகின்றன.

1. பெண் சிசுக்களை கருவில் அழிப்பது, 2. பெண் குழந்தைகளின் இறப்பு, 3. பிறப்பு முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பெண் குழந்தைகளின் விகிதம், 4. ஆண்-பெண் இடையேயான விகிதாசாரம், 5. பெண்களின் எழுத்தறிவு, 6. மகப்பேறின்போது தாயின் மரண விகிதம். இதில் பெண்களுக்கு பாதகமான அம்சங்கள் அனைத்தும் இல்லாமல் இருந்தால், அந்த நாடு பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என எண்ணிக்கொள்ளலாம்.

உலகம் முழுவதும் 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்புப்படி ஆண்களின் எழுத்தறிவு 82.14 சதவீதம் ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.46 சதவீதம் ஆகவும் இருக்கிறது. இந்த கற்றல் இடைவெளியை எவ்வளவு வேகமாக குறைக்கிறோமோ, அதை பொறுத்துதான் பெண்களுக்கான சமத்துவம் சமூக அளவில் உறுதிப்படுத்தப்படும் எனவும் அந்த ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News