பெண்கள் உலகம்

பெண்களுக்கு ஜிங்க் சத்து ஏன் முக்கியம் தெரியுமா...?

Published On 2023-08-28 09:46 GMT   |   Update On 2023-08-28 09:46 GMT
  • உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது.
  • உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

ஜிங்க் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிம சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது

உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான வைட்டமின்களை பெறுவது மிகவும் அவசியம். நம் உடல் ஆரோக்கியமான வளர்ச்சி பெற கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல தாதுக்கள் தேவைப்படுகின்றன. எனவே சமச்சீரான ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா போன்ற காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றில் இருந்து தப்பிக்க உதவுகிறது

பெண்களுக்கு உடல்நலனை காக்க தேவைப்படும் சத்துக்களில் துத்தநாகம் என்னும் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது., இந்த ஜிங்க் பெண்களின் உடல்நலத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

* உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

* ஜிங்க் உணவுகள் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் காக்க உதவுகிறது.

* ஜிங்க் சத்து கால்சியம் அளவிற்கு எலும்புகளுக்கு முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

* ஜிங்க் உணவுகள் ஹார்மோன் உற்பத்தியை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது.

* ஜிங்க்கில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

* ஜிங்க்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் தொகுப்புகள் கண்களின் பார்வை திறனை மேம்படுத்துகின்றன.

* ஜிங்க்கில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து கூந்தல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

* ஜிங்க் பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு மற்றும் கருமுட்டை வளர்வதற்கு உதவுகிறது.

Tags:    

Similar News