பெண்கள் உலகம்

Break Up ஆனோர் கவனத்துக்கு.. EX லவ்வரை மறக்க எவ்வளவு காலம் ஆகும்?.. ஆய்வில் புது தகவல்!

Published On 2025-04-08 10:41 IST   |   Update On 2025-04-08 10:41:00 IST
  • 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
  • முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.

'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, முன்னாள் துணையை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

சராசரியாக, முன்னாள் காதலருடனான உணர்ச்சி ரீதியான பற்றுதல் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலான காதலர்களுக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிணைப்பு முற்றிலும் மறைந்துவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News