அழகுக் குறிப்புகள்

முகம் பளிச்சிட சீரம் எதற்கு...? ஆரஞ்சு குளியல் பொடி போதும்...!

Published On 2024-03-06 09:18 GMT   |   Update On 2024-03-06 09:18 GMT
  • சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.
  • சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.

ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் இனி அதை தூக்கி எறியாமல் வீட்டிலேயே சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.

 இந்த ஆரஞ்சு பழத் தோலினை உலர்த்தி எடுத்துக்கொண்டு அதனுடன் நலங்குமாவு, கடலை மாவு, பயத்தம்பருப்பு மாவு, ஆவாரம்பூ பொடி, ரோஜா பொடி ஆகியவற்றுடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போதும் அல்லது ஃபேஸ் வாஷ் செய்யும் போதும் பயன்படுத்திவரலாம். தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நல்ல ரிசல்ட் இருக்கும்.

 பயன்படுத்தும் முறைகள்:

ஆரஞ்சு பழத் தோல் ஒரு ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு ஸ்பூன், பால் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் கிளியர் ஸ்கின் கிடைக்கும். கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிரை கலந்து சருமத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.

ஆரஞ்சு தோல் மற்றும் சர்க்கரை, தேன் இவற்றை கலந்து முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம்

பிரகாசமாக இருக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இம்முறையை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு தோலுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்து குளிர்ந்த நீரால் கழிவினால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.

வேப்ப இலை பேஸ்ட் , ஆரஞ்சு தோல் பவுடர், தேன், தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பரு வராமல்

தடுக்கும் சருமம் பொலிவுடன் காணப்படும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Tags:    

Similar News