இயற்கை அழகு

மிருதுவான மல்மல் சேலைகள்

Update: 2022-08-03 04:56 GMT
  • மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன.
  • மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை..

பெண்கள் அன்றாடம் உடுத்துவதற்கு மிகவும் வசதியான மிருதுவான சேலைகளின் வரிசையில் மல்மல் சேலைகளுக்கு முதலிடம் என்று சொல்லலாம். பலவித வண்ணங்களில் அருமையான பூ டிசைன்கள், ஜியோ மெட்ரிக் டிசைன்கள்,இக்கத் பிரிண்ட்டுகள் என உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலும் பல்லு மற்றும் பார்டர் வேறு வண்ணத்திலும் இருப்பது போலவும், புடவை முழுவதுமே ஒரே வண்ணத்தில் இருப்பது போலவும், உடல் முழுவதும் ஒரு வண்ணம் மூன்றுவிதமான பார்டர் வண்ணங்கள் என்று வித்தியாசமாகவும் இந்த மிருதுவான மல்மல் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக உடல் முழுவதும் டிசைன்கள் இருக்க பார்டர் ஒன்றன் கீழ் ஒன்றாக பிளெயின் வண்ணத்தில் இருப்பது போன்று வந்திருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் இரண்டு சைடு பார்டர்களும் ஜியோ மெட்ரிக் டிசைனில் இருப்பது போன்று காண்ட்ராஸ்ட் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சேலைகள் கண்களைக் கவரும் விதத்தில் இருக்கின்றன..ஆரஞ்சு வண்ணத்திற்கு அடர் நீல வண்ணம் பார்டராக வருவது போலவும், மஜன்தாவிற்கு வான நீல நிறம் பார்டராக வருவது போலவும், கிரே வண்ண உடலிற்கு மஜன்தா வண்ணம் பார்டராக வருவது போலவும் மிகவும் அருமையாக கண்கவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.

உடல் முழுவதும் அலை வடிவத்தை செங்குத்தாக வடிவமைத்து பார்டர் மற்றும் பல்லு விற்கு வெறும் கோடுகள் வருவது போன்று வடிவமைத்திருப்பது அணிபவருக்கு ஒல்லியான தோற்றத்தை தருவதாக இருக்கும். உடல் முழுவதும் கொடியில் இலைகளும் பூக்களும் இருப்பது போன்றும் பார்டர் மற்றும் பல்லுவிற்கு நெளி கோடுகள் வருவது போன்றும் டிசைன் செய்யப்பட்டிருப்பது அலுவலகம் செல்லும் பெண்கள் உடுத்துவதற்கு நேர்த்தியான ஒன்றாக இருக்கும்.

சில பெண்கள் மிகவும் மிருதுவான வண்ணங்களில் வரும் சேலைகளை அணிவதற்கு விருப்பப்படுவதால் அதுபோன்றும் இந்த மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன. உடல் முழுவதும் சந்தன வண்ணத்தில் நீலம், பச்சை, மஞ்சள்,பழுப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய டிசைன்களை பிரிண்ட் செய்து அதே வண்ணங்களை பார்டராகக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கின்றது. வயதான பெண்கள் மட்டுமல்லாமல் சிறு வயது பெண்களும் இதுபோன்ற மிருதுவான வண்ணங்களை இப்பொழுது தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.. இந்த மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை.. இந்த புடவைகளை வீட்டிலேயே சாதாரண ஷாம்பு வாஷ் செய்து அணியலாம்.

உடல் முழுவதும் செங்குத்துக் கோடுகள் இருக்க பல்லு மற்றும் பார்டரில் ஃபிகர் பிரிண்டுகள் வருவது போன்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் புடவைகள் அதன் வண்ணம் மற்றும் டிசைனிற்கு அட்டகாசமாக பொருந்தி வருகின்றது என்று சொல்லலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் அணிவதற்கு இந்த புடவைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும்..புடவை முழுவதும் செல்ஃப் கலரில் இருப்பது ஒரு விதமான அழகு என்றால் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் வரும் புடவைகள் மற்றொரு விதத்தில் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

உடல் முழுவதும் கலம்காரி டிசைன்களுடன் பாந்தினி பிரிண்ட் பார்டர் மற்றும் பல்லுவுடன் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.மிருதுவான வண்ணத்தில் உடல்முழுவதும் கலம்காரி டிசைன்கள் வருவது போன்றும் அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பாந்தினி பிரிண்டுகள் பார்டர் மற்றும் பல்லுவாக வருவது போன்றும் வடிவமைத்து இருப்பது புடவையை விரும்பாதவர்களைக் கூட வாங்கத் தூண்டும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்றது.

பத்திக் பிரிண்ட்களை இந்தப் புடவைகளில் மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்..கையகல பட்டையான செங்குத்து கோடுகளில் பத்திக் பிரிண்ட்டுகளும் அதையடுத்து கையகல பிளெயின் வண்ணப் பட்டைகளும் வருவது போன்று இருக்கும் புடவைகள் அட்டகாசமாக இருக்கின்றன.. அதிலும் பிரிண்டுகள் ஒரு வண்ணத்திலும் பிளெயின் பட்டைகள் மற்றொரு வண்ணத்திலும் வருவது மிகவும் அழகாக இருக்கின்றது.

மல் மல் காட்டன் புடவைகளில் பிளவுஸுடன் வரும் புடவைகளும் இருக்கின்றன..உடல் முழுவதும் பூ டிசைன்கள், பல்லுவிற்கு வித்தியாசமான டிசைன்கள் இருப்பதுபோன்று வரும் புடவைகளுக்கு மிகவும் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிளவுஸ் துணிகளை இணைத்திருக்கிறார்கள்..

மல்மல் புடவைகளில் ஹாஃப் அண்ட் ஹாஃப் பேட்டர்ன்களும் வருகின்றன.உடல் முழுவதும் பூ டிசைன் இருந்தால் ஃபிரில்லிற்கு கட்டங்கள், கோடுகள் மற்றும் பிளெயின் வண்ணங்கள் வருவது போன்றும் வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த புடவைகளில் ஹேண்ட் பிரிண்டுகள் மிகவும் கலக்கலாக இருக்கின்றன என்று சொல்லலாம்.. வெளியில் அணிந்து செல்வதற்கு மிகவும் பொருத்தமாக இந்த சேலைகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

மிருதுவான துணியில் அட்டகாசமான டிசைன்களும் அருமையான வண்ணங்களும் இருப்பது போன்று வடிவமைத்து வருவது மல்மல் சேலைகளின் சிறப்பம்சம் என்று சொல்லலாம்.. இந்தப் புடவைகளை டிரை கிளீன் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் வீட்டிலேயே சாதாரணமாகத் துவைத்துப் பயன்படுத்தலாம்.கோடைக்காலத்திற்கு பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற சேலைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.இவ்வளவு அருமையான இந்தப் புடவைகள் 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்குள் கிடைப்பது மல்மல் புடவைகளின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

Tags:    

Similar News